இந்தியாவிலுள்ள மத்திய மாநில அரசுகள் மக்களைப் பாதுகாத்து நல்வழிப்படுத்த, எந்தக் கோட்பாடுகளை உள்ளடக்கி சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பதே அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்(Directive Principles) ஆகும். இது பற்றி நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் அமைப்பின் நான்காவது பகுதியில் அரசின் நெறிசெய் நியதிகள் என்ற தலைப்புடன் காணப்படுகின்றது. இப்பகுதியில் 16 திட்ட விதிகள் உள்ளது. இவை அரசு செயலாற்றும் பொழுது பின்பற்ற வேண்டிய கொள்கைகள் ஆகும்.
அரசு என்ற சொல்லுக்கு அரசியல் அமைப்பின் III வது பகுதியில் திட்டவிதி 12 இவ்வாறு விளக்கம் அளிக்கின்றது.இந்திய அரசாங்கம், பாராளுமன்றம், மாநில அரசாங்கள், சட்டமன்றங்கள்,ஆட்சி அமைப்புகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இயங்கும் இதர அதிகார அமைப்புகள் ஆகியவை அரசு என்பதில் அடங்கும். அரசியலமைப்பில் அரசு நெறிசெய் கொள்கைகள் மீறப்பட்டால் அமல் செய்தே ஆக வேண்டும் என எந்த நீதிமன்றத்தாலும் உத்தரவை பிறப்பிக்க முடியாது. ஆனால் நாட்டின் ஆட்சி முறையின் அடிப்படைகளாக விளங்குபவை இவை. அரசை கட்டுப்படுத்த சக்தி பெற்றிருக்கவில்லை என்றாலும் இவையை புரக்கணிக்க இயலாது ஏனெனில் இவை புனிதமான பிரகடங்கள் என கூறப்படுள்ளது.
இவற்றை மூன்று தலைப்புகளில் வகைப்படுத்தலாம்
· பொது உடமை கொள்கைகள்
· காந்திய தத்துவங்கள்
· முற்போக்கு கொள்கைகள் என அறியப்படுகின்றது
1.பொது உடமை கொள்கைகள்
· ஆண்களும் பெண்களும் சமமான நிலையில் உரிமையினை பெறுதல்
· வங்கிகளில் சொந்தமும் நிறுவாகமும் பொது நன்மையை மேம்படுத்தும் விதம் கட்டுப்படுத்தல்
· உடமைகளும் உற்பத்தி சாதனங்களும் ஒரு சிலரிடம் குவியாவண்ணம் செயல் மேற்கொள்ளல்
· ஆண்களும் பெண்களும் ஒரே விதமான வேலைக்கு ஒரே விதமாக ஊதியத்தை பெறுதல்
· சக்திக்கும் வயதுக்கும் ஒவ்வாத வேலைகளை பொருளாதார நெருக்கடியால் மேற்கொள்ளுவதை தடுத்தல்
· தொழிலாள மக்கள் வேலை செய்யும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, வேலை இல்லா திண்டாட்டத்தை நீக்க உதவுதல்,
· முதுமை நிலையில் நோயுற்ற உடல் ஊனமடைந்த தொழிலாளர்களுக்கு உதவியளித்தல்
· தொழிலாளர்கள் நியாயமான நல்ல வேலை செய்யும் சூழ் நிலையைப் பெற வகைசெய்தல்
· தாய்மைப்பேற்றை அடைந்த பெண் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் தகுந்த ஓய்வு அளித்தல்.
2.காந்திய தத்துவங்கள்:
கிராம பஞ்சயுத்துகளை அமைத்து அதிகாரம் கொடுத்து செயல்ப்பட வைத்தல் வேண்டும்
கிராம குடிசைத் தொழில்களை கூட்டுறவு அடிப்படையில் வளர்த்தல்
உழவு தொழில்களை கூட்டுறவு அடிப்படையில் வளர்த்தல்
உழவு தொழிலையும் கால்நடைகளை பேணுவதையும் விஞ்ஞான ரீதியில் அமைத்தல் கால் நடைகள் வளர்த்தல், கொலை செய்தல் தடுத்தல்.
கீழ் நிலையிலுள்ள அட்டனணை சாதியின் பொருளாதார நிலை கல்வி நிலை ஆகியவற்ற முன்னேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுத்தல்
உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் போதை தரும் பானங்களையும் மருந்துகளையும் உபயோகிப்பதை தடை செய்தல்.
3.முற்போக்கு கொள்கைகள்
மக்கள் பின்பற்ற தகுந்த உரிமை இயல் தயாரித்தல்
14 வயது வரையிலுள்ள சிறுவர்களுக்கு கட்டாய இலவச கல்வி அளித்தல்
சத்தான உணவு வாழ்க்கைத்தரம் சுகாதாரம் மேம்படுத்தல்
சர்வதேச அமைதி கௌரவ உறவு பேச்சு வார்த்தைகள் மூலம் சர்வ தேச பிரச்சனைகளை தீர்த்தல் என கொள்கைகள் வகுத்துள்ளது.
நெறி செய் நியதிகள் அரசியல் அமைப்பின் மற்ற விதிகளை மீற கூடாது.
நெறி செய் நியதிகளை அமல் செய்ய பிறப்பிக்கப்படும் ஆட்சித்துறை உத்தரவுகள் அரசியல் சட்டங்களை மீறும் வகையில் அமையக்கூடாது.
பொது நன்மைக்காக தனி நபரின் உரிமை நியாயமற்ர முறையீல் பரிக்கப்படலாகாது. ஆனால் தனி நபர் உரிமைகளை காப்பாற்ற வேண்டி பொது நன்மையை கைவிடப்படாது
இந்தப் பகுதியில் காணப்படும் கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவைகள்; இந்த கொள்கைகளின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது அரசின் கடமை” என்று கூறப்பட்டிருந்தாலும், “இந்த அம்சங்களை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்த முடியாது” என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்த அம்சங்களை நிறைவேற்றுமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது.
0 comments:
Post a Comment