பெண்களை அநாகரீகமாக சித்தரித்தல் (தடைசெய்யும்) சட்டம், 1986 (Indecent Representation of Women (Prohibition) Act, 1986

பெண்களை அநாகரீகமாக சித்தரித்தல் (தடைசெய்யும்) சட்டம், 1986 (Indecent Representation of Women (Prohibition) Act, 1986) பிரிவு 6 மற்றும் 7 ஆகியவற்றின்கீழ், ஒரு பெண்ணை உடல்ரீதியாகவோ, வேறு ரீதியாகவோ கண்ணியக்குறைவாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளிட்ட எதையும், அந்த பெண்ணை சிறுமைப்படுத்தும் நோக்கில் வெளியிடுவோருக்கு அவர் அக்குற்றத்தை முதல் தடவையாக செய்தால் இரண்டு ஆண்டுகளும், மறுமுறையும் அதே குற்றத்தில் அவர் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கூடுதலாக இரண்டாயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கலாம்

.த.ச. பிரிவு 509ன் படி:

ஒரு பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் விதத்தில் பேசுபவர்களை, ஒலி எழுப்புபவர்களை, சைகை செய்பவர்களை, அல்லது ஏதேனும் பொருளை காட்டுபவர்களை  பெண்களின் அந்தரங்கத்துக்குள் அத்துமீறி பிரவேசிப்பவர்களை ஓராண்டு சிறைத்தண்டனைக்கோ அல்லது அபராதத்திற்கோ அல்லது இவை இரண்டுக்குமோ ஆட்படுத்தலாம்


திருவண்ணாமலை ராஜசேகர் என்ற நித்தியானந்தனும், ரஞ்சிதா என்ற திரைப்பட நடிகையும் பங்கேற்ற காட்சித் தொகுப்புகள்  ஆபாசம் நிறைந்த அந்தக் காட்சிகளை தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருடைய வீட்டிற்கும் அனுப்பிய ஊடகங்கள் குறித்து தேவையான அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை. இளவயதுடையோர் உள்ளிட்ட பார்வையாளர்களின் மனதை பாதிக்கக்கூடிய அந்த காட்சிகளை ஒலி-ஒளிபரப்புவதற்கு சட்டம் அனுமதிக்கிறதா என்ற கேள்வி பரவலாக விவாதிக்கப்படவில்லை.

Comments

Popular posts from this blog

தமிழக நாட்டுப்புற கலைகள்

FORMATS OF RADIO PROGRAMMES

MASS COMMUNICATION