தமிழ் நாடகம்




தனி மனித உணர்வுகள் இலக்கிய அந்தஸ்து பெற்ற போது காட்சி திறன் கொண்ட நாடகம் கருத்து தளத்தில் மாற்றம் கொண்டு வரும் தன்மையுள்ளது என புரிந்துகொண்டனர். 19 ஆம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சி பெர்னாட்ஷா இப்ஸன், செகாவ் போன்ற எண்ணற்ற நாடக ஆசிரியர்களை உலகிற்கு வழங்கியது.
இந்தியாயாவில் சிறந்த சமஸ்கிருத நாடகங்கள் எழுதப்பட்டிருந்தன. கூத்து ஜாத்ரா நௌசங்கி, தமாஷா போன்ற நாட்டுப்புறக் கலை மரபுகளின் வடிவாக்கத்தையே இந்திய நாடகம் சார்ந்திருந்தது. தமிழகத்தில் நடனத்திலிருந்து நாட்கம் தோன்றியதால் கூத்து கலைஞர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகவே மாறிவிட்டது. இலக்கியங்கள் என்பவை கல்வி அறிவு பெற்ற புலவர்களாலும் ஆடல் பாடல் சம்பந்தப்பட்ட கூத்து வகை நாடகங்கள் பாமரர்களாலும் மேற்கொள்ளப் பட்ட நிலையில் இங்கு ஒரு இடவெளி உருவாகி போனது.
நாடகம் என்பது மனத்தை கிளரச்  செய்து இன்பத்தைமூட்டிக் காமத்தை அதிகப்படுத்துவது என்று சமணம் போன்ற மதங்கள் பிரசாரம் செய்தன. இலக்கியம் என்பது அறிவாற்றல் கொண்ட செயல்பாடு போலவும் நாடகம் என்பது சாதாரண பெரும்திரள் மக்கள் (Populist) செயல்பாடு என்பது போலவும் ஒரு கருத்து தமிழ் சூழலில் உருவாக்கப்பட்டது.http://boffinnews.blogspot.in/2011/12/drama-program-in-tamilnadu-tamilnadu.html

 இருப்பினும் இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் பம்மல் சம்பந்த முதலியாரும் சங்கர தாஸ் சுவாமிகளும் தங்களுடைய சிறப்பான நாடகச் செயல்பாடுகளால் நாடகத்துக்கு ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்கினர். மதுரகவி பாஸ்கர தாஸ், விஸ்வநாத் தாஸ் போன்ற தேசிய நாடகவாதிகள் சுதந்திர போராட்டக் காலத்தில் நாடகத்தை ஆட்சியளர்கள் பயப்படும் அளவுக்கு மக்கள் முன் எடுத்து சென்றனர். பின்னர் திராவிட இயக்கம் அரசியலையே நாடக மேடையாக்கி புதிய சமூகநீதிக்கான குரலை நாடகம் ஊடாக எழுப்பி அரசியல் மாற்றதிற்கு அழைத்து சென்றது.
தமிழகத்தில் ந. முத்துசாமி, இந்திரா பார்த்த சாரதி, ஜெயந்தன் போன்ற நாடகக்காரர்கள் செயல்பாடுகள் ஆக்கபூர்வமாக இருப்பினும் நாடகத்தளத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை.
தரமான இயக்குனரின் நாடகம் புதிய உணர்வும் ஒவ்வொரு அசைவும் பொருளும் அர்த்தமிக்கதாக இருக்கும். திட்டமிட்டு நுட்பமாக வலிமையான அர்த்தங்கள் நிறந்து வடிவமைக்கப்பட வேண்டும். பெரும் பாலும் வார்த்தைகளில் நிற்காமல் காட்சிகளை நம்புபடியாக இருத்தல் வேண்டும்.நாடகத்தின் உள்ளடக்கம் தற்கால சூழலோடு பொருத்தி பாக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.dance

Comments

Popular posts from this blog

தமிழக நாட்டுப்புற கலைகள்

FORMATS OF RADIO PROGRAMMES

ROLE OF ADVERTISING IN MARKETING MIX