Friday, 5 December 2014

திரைக்கதை மற்றும் வசனம் - சேது 1-5

திரைக்கதை மற்றும் வசனம் - சேது


Sethu

கதைச் சுருக்கம் 

சேது ஒரு கல்லூரி மாணவன்! சற்று முரட்டுத்தனமான சுபாவம் கொண்டவன். கல்லூரி மாணவர்களின் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படும் சேது, அதே கல்லூரியில் படிக்கும் மாணவி அபிதாவைப் பார்க்கிறான். அபிதா வெகுளிப் பெண். அதே ஊர் கோயிலில் குருக்களாக இருப்பவரின் மகள். அவளுக்கென்று முடிவு செய்யப்பட்ட முறைப் பையனும் இருக்கிறான். 

அபிதாவின் அப்பாவித்தனமான நடவடிக்கைகள் சேதுவைக் கவர, அவள் மீது காதல் வயப்படுகிறான். அவளும் தன்னைக் காதலிப்பதாக தப்பர்த்தம் செய்து கொள்கிறான். 

அதன் விளைவாக, அபிதாவுக்கு கொலுசு வாங்கிக் கொடுக்கிறான் சேது. அதை வாங்க மறுக்கும் அபிதா, அவனைக் காதலிக்கவில்லையென்றும் சொல்கிறாள். அபிதாவின் மனதில் தான் இல்லையென்று தெரிந்ததும் இடிந்து போகும் சேது, அவளைக் கடத்திக் கொண்டு போய் தன் மனதில் உள்ள எண்ணங்களை எல்லாம் கொட்டித் தீர்க்கிறான். 

இதற்கிடையில், தன் அக்காவின் வாழ்க்கைச் சீரழிந்து பேகாமல் இருப்பதற்கு சேதுதான் காரணம் என்பதை முறைப்பையன் மூலம் அறிகிறாள் அபிதா. அதோடு சேதுவின் நல்ல குணங்களும் தெரிய வருகிறது அவளுக்கு. சேதுவின் காதலை ஏற்கிறாள் அபிதா. 

தான் விரும்பிய பெண் தன்னை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் சேது திளைத்திருக்கிறான். அவனால் பாதிக்கப்பட்ட விபச்சார விடுதி நடத்தும் கும்பல் சேதுவை மூர்க்கமாகத் தாக்குகிறது. அந்த தாக்குதலில் மூளை பாதிக்கப்பட்டு மன நோயாளியாகிறன் சேது. மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படும் சேது, சில நாட்களுக்குப் பின் பாண்டிமடம் என்ற இடத்தில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுகிறான். அங்கே இருக்கும் ஆயிரக்கணக்கான மன நோயாளிகளுக்கிடையே அவனும் ஒருவனாக சிகிச்சை பெறுகிறான். 

சேதுவை மறக்க முடியாமல் தவிக்கும் அபிதாவை நிர்ப்பந்தித்து அவளது முறைப்பையனுக்கு மணம் முடிக்க ஏற்பாடு நடக்கிறது. 

பாண்டிமடத்தில் கொடுக்கப்பட்ட சிகிச்சையில் மனநிலை சரியாகும் சேது, அங்கிருந்து தப்பித்து அபிதாவைப் பார்க்க வருகிறான். 

முறைப்பையனை மணக்க இஷ்டமில்லாமல் உயிரை மாய்த்துக்கொண்ட அபிதா பிணக் கோலத்தில் கிடக்கிறாள். அதைக் கண்டு அதிர்ச்சியடையும் சேது, தன் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரையும் துறந்து மீண்டும் பாண்டிமடத்துக்கே செல்கிறான். 

காட்சிகள் : 
சேது - காட்சி - 1


வருகின்ற தேர்தலில் என் கண்ணான கண்மணிகளே... உங்களது பொன்னான வாக்குகளை ரெளடிக்கு ரெளடி, போக்கிரிக்குப் போக்கிரி, கேடிக்குக் கேடி, பொறுக்கிக்குக் பொறுக்கி எங்கள் ஆருயிர் அண்ணன்...

இருண்ட திரையில் ஆண் குரல் அறிவிக்க... 'சேது' டைட்டில்

அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு ஓட்டுப் போட்டுத் தம்பிமாரே நம்ம சேர்மனாக வெற்றி வாகை சூட வைக்கணும்...

இருண்ட திரையில் பாடல் ஒலிக்க டைட்டில்ஸ்.


டாப் ஆங்கிள்/ லாங் ஷாட் -அக்ரஹாரம். 

மிட் ஷாட் - பேனிங்

சிறுவர்கள் சிலர் வேதம் படிக்கின்றனர். அப்போது மந்திரம் படிக்கும் பெண் (அபிதா ) குரல் கேட்கிறது. அனைவரும் திரும்பிப் பார்க்கின்றனர்.

ஸரணம் பவ கருணா மயி குரு

னதயாளோ...

அபிதா பாடுகிறாள்

குளோஸ் ஷாட் - அபிதா: ஸரணம் பவ கருணா மயி குரு தீனதயாளோ...

கருணா ரஸ வருணாலய கரி ராஜ

க்ருபாலோ...

குளோஸ் ஷாட் - அபிதா பூப்பறித்தபடி பாடுகிறாள். அது நாகலு விதி நாமலி...

மிட்ஷாட் - அபிதா: சுதியா சுரப் பரிதம்...

மிட்ஷாட் - பூஜையறையில் சாமி கும்பிட்டபடி பாடுகிறாள் அபிதா. மதுசூதன மதுசூதன ஹரமா மஹ துரிதம்...

மிட்ஷாட் - மாட்டுத் தொழுவத்தில் சாம்பிராணி புகை காட்டியபடி பாடுகிறாள் அபிதா.

அபிதா: ஸரணம் பவ கருணா மயி... குரு தீ னதயா ளோ... க்ரினி மண்டல மணிகுண்டல... ஹனி மண்டல ஸயநா...

குளோஸ் ஷாட் - பாடியபடி கன்றுக்குட்டிக்கு பொட்டு வைக்கிறாள் அபிதா.

குளோஸ் ஷாட் - பூ.

குளோஸ் ஷாட் - பூக்கள்.

குளோஸ் ஷாட் - அபிதாவின் கண்.

குளோஸ் ஷாட் - அபிதாவின் வாய்.

குளோஸ் ஷாட் - புறா.

குளோஸ் ஷாட் - புறாக்கள்.

குளோஸ் ஷாட் - அபிதா துளசி மாடத்திற்கு தண்ணீர் ஊற்றியபடி பாடுகிறாள்.

அணி மாதி சுகுண பூஷண

குளோஸ் ஷாட் - சமையல் செய்தபடி பாடுகிறாள். மணி மண்டப ஸதநா...

குளோஸ் ஷாட் - அபிதா ஊஞ்சலில் ஆடியபடி பாடுகிறாள்.

வினதா சுகுதன வாஹன முனி மானஸ பவநா...

லாங் ஷாட் - அபிதா பாடியபடி கோலம் போடுகிறாள். மதுசூதன மதுசூதன ஹரமா மகதுரிதம்...


மிட் ஷாட் - துணியைத் துவைத்தபடி பாடுகிறாள் அபிதா. ஸரணம் பவ கருணாமயி...



குளோஸ் ஷாட் - அபிதா பாடிக்கொண்டே துணியைக் காயப்போடுகிறாள். குரு தீனதயாளோ...

குளோஸ் ஷாட் - அபிதா : ஸரணம் பவ கருணாமிய...



குளோஸ் ஷாட் - அபிதாவின் கை கோலம் போடுகிறது. லாங் ஷாட் / டாப் ஆங்கிள் - பாடியபடி அபிதா கோலம் போட்டு முடிக்கும்போது அவளது அப்பா (குருக்கள்) வருகிறார். அதே நேரத்தில் அபிதாவின் முறைப்பையனும் (அம்பி), இன்னொருவரும் (அய்யர்) வருகின்றனர்.

அய்யர் (அபிதாவின் அப்பாவிடம்): ஆகா... இவ பாடி கேக்கறச்சே லோகத்திலே உள்ள கவலை எல்லாம் பறந்து போயிடறது.. எங்கண்ணே பட்டுடும் போல இருக்கே... திருஷ்டி சுத்திப் போடுங்கய்யா.

குளோஸ் ஷாட் - குருக்கள் முகத்தில் பெருமிதம்.

மிட் ஷாட் -அய்யர் : வாசிக்கறாளோ, இல்லையோ...

குருக்கள்: ம்... காலேஜ்ல சேர்த்துவிட்டிருக்கேன். கட்டிக்கப் போறவன் அவ படிக்கணும்னு பிரியப்படுறான்.

அய்யர்: என்னடா அம்பி...

அம்பியைப் பார்த்து கேட்கிறார்.

குளோஸ் ஷாட் - அம்பி: ஆமா... மாமா... வேதத்தை மட்டும் படிச்சு நான் என்னத்த கண்டேன்? அவளாவது உலகத்தைப் புரிஞ்சுக்கட்டுமேன்னுதான்...

குளோஸ் ஷாட் - அய்யர்: வரப்போற ஆம்படையாள் இங்கிலீஷ்லே நாலு வார்த்தை பேசணுமுன்னு ஆசைப்படுறே... தப்பில்ல. அம்பி கொடுத்துவச்சவந்தான்.

குளோஸ் ஷாட் -குருக்கள் முகத்தில் மகிழ்ச்சி.




சேது - காட்சி 3 - காலை - INT./ சேது வீடு.


குளோஸ் ஷாட் - ஒரு வீட்டின் வெளிப்புறம். 'எம்.கே.பி. வாசுதேவன், எம்..,பி.எல்., மாஜிஸ்ட்ரேட்' என்ற போர்டு மாட்டப்பட்டுள்ளது. பேனிங் டு - வீட்டின் வெளிப்புறத் தோற்றம்.

குளோஸ் ஷாட் - சமையல் கட்டில் சேதுவின் அண்ணி வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

குளோஸ் ஷாட் - டைனிங் டேபிளில் குழந்தை (சேதுவின் அண்ணன் மகள்) அமர்ந்திருக்கிறது.

குளோஸ் ஷாட் - குழந்தையின் எதிரில் சேதுவின் அண்ணன் (வாசுதேவன்) அமர்ந்திருக்கிறார்.

அண்ணன்: ஏய் எவ்வளவு நேரம்டி... ?

சமையல்கட்டை நோக்கி குரல் கொடுஇக்கிறார். மிட் ஷாட் - அண்ணன், குழந்தை.

அண்ணி குரல் (Overlap): வர்றேன்... வர்றேன்...

குழந்தை: அப்பா... அப்பா... சித்தப்பா இன்னும் தூங்குறான்

அண்ணன்: அவன் கிடக்குறான் சோம்பேறி. நீ சமத்துக்குட்டி.

சமையல் கட்டிலிருந்து டிபன் கொண்டு வருகிறாள் அண்ணி.

அண்ணி: விடிஞ்சதிலேர்ந்து மணிக்கணக்கா பேப்பரும் கையுமா உட்கார்ந்துக்கிட்டு ஒன்பது மணி ஆனவுடனே ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பிச்சிருங்க. நான் கிடந்து ஆலாப் பறக்க வேண்டியிருக்கு... டிபனைப் பறிமாறுகிறாள்.

அண்ணன்: துரை... இன்னும் எந்திரிக்கலையோ... ?

குளோஸ் ஷாட் - சேது மாடியிலிருந்து இறங்கி வருகிறான்.

மிட் ஷாட் -அண்ணன், அண்ணி

அண்ணி : வர்றான்... வர்றான்... ஏதாவது கேக்கணுணமன்னா அவன் சாப்பிட்டு முடிக்கட்டும் அப்புறமாக் கேளுங்க. அண்ணி உள்ளே போகிறாள்.

குளோஸ் ஷாட் - சேது வருகிறான். டைனிங் டேபிளில் உட்காருகிறான். குழந்தையை அடிப்பது போல் பாவனை செய்கிறான். குழந்தை பழிப்புக் காட்டுகிறது. அண்ணன் அவனை முறைக்கிறார்.

குளோஸ் ஷாட் - சேது டேபிளில் தாளம் போட, அவனை எரிச்சலாகப் பார்க்கிறார் அண்ணன்.குளோஸ் ஷாட் - சேது தாளம் போட்டபடி பாடுகிறான்.

சேது : ஏய் தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்... ஏய் தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்... இந்தச் சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமி...

குளோஸ் ஷாட் - குழந்தை பேனிங் டு அண்ணன் சேதுவை முறைக்கிறார். குளோஸ் ஷாட் -சேது பாடுகிறான்.

என் கண்ணைக் கட்டி காட்டில விட்டது சாமி... சாமி... சாமி...

மிட் ஷாட் - சேது தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருக்க அண்ணி டிபனுடன் வருகிறாள். குழந்தை சிரிக்க முயல, கண்களால் அதட்டுகிறாள். அண்ணன் முறைக்கிறார்.

சேது : இந்தச் சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமி... என் கண்ணைக் கட்டி காட்டில விட்டது சாமி... சாமி... சாமி...

குளோஸ் ஷாட் - முறைப்புடன் அண்ணன்.

குளோஸ் ஷாட் - அண்ணி அவரைப் பார்க்கிறாள். குளோஸ் ஷாட் - அண்ணணின் முறைப்பு.

மிட் ஷாட் - அண்ணி பறிமாற, அண்ணன் சாப்பிட முயல, மறுபடி சத்தமாகப் பாடுகிறான் சேது. அண்ணன் பயந்து சாப்பாட்டை நழுவ விடுகிறார். மனைவியை முறைக்கிறார்.

சாராயத்தை ஊத்து... ஜன்னலத்தான் சாத்து... ஏய்... சாராயத்தை ஊத்து... ஜன்னலத்தான் சாத்து...

குளோஸ் ஷாட் - குழந்தை

மிட் ஷாட் - சேது பாடியபடி குழந்தையின் கன்னத்தைக் கிள்ளுகிறான்.

குழந்தை : ச்சீ... போ... ரெளடி...

அண்ணி : ஏய்... என்ன பேச்சு இது?

எவன்டி இதெல்லாம் உனக்கு சொல்லித் தர்றது? அண்ணி குழந்தையை அதட்டுகிறாள். அண்ணன் குறுக்கிட்டு...

அண்ணன் : குழந்தையை எதுக்கு அதட்டுறே? அவ என்ன தப்பா சொல்லிட்டா... அவன் ரெளடி இல்லையா?

மிட் ஷாட் - சேது : இப்ப என்ன ரெளடித்தனம் பண்ணிட்டோம்?

மிட் ஷாட் - அண்ணன் : ஏய், எகிர்ர வேலையெல்லாம் என் கிட்ட வெச்சுக்காதே, அவகிட்ட வச்சுக்க. என்ற அண்ணன், மனைவியிடம்

நேத்து இவ்வளவு நடந்திருக்கே, கொஞ்சமாவது கவலை இருக்காடி இவனுக்கு... ?

குளோஸ் ஷாட் - சேது : அவன் என்ன பண்ணினான்னு உனக்குத் தெரியுமா?

மிட் ஷாட் - அண்ணன் : டேய், தோத்தவன் அப்படித்தாண்டா பண்ணுவான். நீ தான் பொறுமையாப் போகணும்.

குளோஸ் ஷாட் - சேது : அப்படியெல்லாம் உன்னை மாதிரி இருக்க என்னால முடியாது.

மிட் ஷாட் - அண்ணன் : பார்த்தியாடி...?

சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றும் முயற்சியாக டிபனைப் பரிமாறுகிறாள் அண்ணி சேதுவின் தட்டிலும் இட்லியை வைக்கிறாள்.

அண்ணி : சரி, சரி முதல்லே சாப்பிடுங்க. அப்புறம் பேசிக்கலாம், அவரு சொல்றதும் சரிதாண்டா... நமக்கு என் இந்த வம்பெல்லாம்? தவறி கண்ணுல கிண்ணுலே பட்டிருந்தா என்ன ஆகிறது?

குளோஸ் ஷாட் - சேது : ஏய், நீயும் அவரோட சேர்ந்துகிட்டு... எலெக்ஷன்னா அப்படித்தான் இருக்கும். உங்க பேச்சைக் கேட்டு ஒதுங்கிப் போனா, காலேஜ்ல என் கெளரவம் என்னாகிறது?

மிட் ஷாட் - அண்ணன் : ... கெளரவம்! அப்புறம்... இப்படியே பண்ணிக்கிட்டு இருப்பீங்க... நான் கிடந்து கோர்ட்ல கேவலப்பட வேண்டியது... அப்படித்தானே? அதை விடு, சேதுன்னு பார்த்துப் பார்த்து எவ்வளவு அழகா பேர் வச்சோம். இப்ப ஏதோ ஒண்ணு சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கானுங்களே...

குளோஸ் ஷாட் - குழந்தை : சிய்யான்... சிய்யான்...

மிட் ஷாட் - அண்ணன் : ... சிய்யான். ஏன்டா, அதைக் கேட்கும் போதே நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போல இருக்கு. காலேஜ்க்கு போனமா படிச்சோம்ன்னு இல்லாமே, சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு திரியறாரு. கேட்டா கெளரவப் பிரச்சனையாம். இப்போ படிக்கிற மாதிரியா இருக்கான்? அவன் தாடியும் டிரெஸ்சும்...

மிட் ஷாட் - அண்ணி : அப்பப்பா... கொஞ்சம் பேசாம இருக்கீங்களா? முதல்ல அவன் சாப்பிட்டு முடிக்கட்டும். அப்புறம் பேசிக்கலாம்.

அண்ணி சேதுவின் அருகில் போகிறாள். இட்லியை அவன் தட்டில் வைக்கிறாள்.

அண்ணன் : இவன் கெட்டதும் இல்லாம இன்னும் மூணு பேர சேர்த்து கெடுத்துக்கிட்டு இருக்கான்.

குளோஸ் ஷாட் - சாப்பிட்டுக் கொண்டிருந்த சேது நிமிர்ந்து அண்ணியை முறைக்கிறான்.

மிட் ஷாட் - அண்ணன் : வை வை. நல்லாத் தின்னுட்டு இன்னும் நாலு பேரை அடிக்கட்டும். கழுதைப்புலி மாதிரி வளர்ந்திருக்கான்...

அண்ணி சட்னியை ஊற்ற, அண்ணன் சொல் பொறுக்காமல் சாப்பாட்டுத் தட்டை விசிறி அடித்துவிட்டு எழுந்து போகிறான் சேது.

அண்ணி : டேய்... டேய்... நில்லுடா... அவனைத் துரத்திக்கொண்டு போகிறாள் அண்ணி.குளோஸ் ஷாட் - அண்ணன்

சேதுவின் குரல்(Overlap) : போ போ... நீயும் உன் புருஷனும் எல்லாத்¨யும் கொட்டிக்கங்க...

குளோஸ் ஷாட் - குழந்தை மிரட்சியுடன் பார்க்கிறது.

மிட் ஷாட் - அண்ணி திரும்பி வந்து வாசுதேவன் அருகில் அமர்கிறாள்.
சேது - காட்சி 4 - பகல் - EXT. / ரயில்வே ஸ்டேஷன்.


லாங் ஷாட் - கல்லூரி மாணவ, மாணவிகள் கூட்டமாக சென்றுகொண்டிருக்க, சேது பைக்கில் வருகிறான். சடன் பிரேக் போட்டு பைக்கை நிறுத்துகிறான்.

மிட் ஷாட் - ரயில்வே ஸ்டேஷன் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து சேதுவின் நண்பர்கள் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்க சேது வருகிறான்.

சேது : டீ சொல்லு. (நண்பனைப் பார்த்து) கஞ்சா குடிக்கிற நாயே... காலங்கார்த்தாலேயே ஆரம்பிச்சுட்டியாடா...

நண்பனைத் திட்டிய சேது, டீ சொல்லப்போன மற்றொரு நண்பனை அழைக்கிறான்.

சேது : சாமி...

காலி சிகரெட் பாக்கெட்டைக் காட்டி சிகரெட் வாங்கி வரச் சொல்கிறான்.

சேதுவின் நண்பன் : இளமை அது போனா அது திரும்பாது...

கஞ்சா மயக்கத்தில் பாடுகிறான்.

இன்னொருவன் : ஏய், அடடா...

குளோஸ் ஷாட் - தோழியுடன் வரும் அபிதா அவர்களைப் பார்க்கிறாள். தோழி சேதுவைக் காட்டி,

காலேஜ் சேர்மன்...?

மிட் ஷாட் -நண்பர்களுடன் சேது அமர்ந்திருக்கும் இடத்தை அபிதா கடக்க அவளைப் பார்த்துக்கொண்டே...

சேது : இது யாருடா...இது?

நண்பனிடம் கேட்ட சேது 'ஓய்' என்று சத்தம் எழுப்பி அவளைக் கூப்பிடுகிறான்.

குளோஸ் ஷாட் - அபிதாவும் தோழியும் நிற்கின்றனர். குளோஸ் ஷாட் - சேது 'வா' என்று சைகையால் அழைக்கிறான். குளோஸ் ஷாட் - அபிதா பயந்துபோய் பார்க்கிறாள்.

குளோஸ் ஷாட் - சேது : இங்க வா...

டாப் ஆங்கிள்-மிட் ஷாட் -அபிதாவும் தோழியும் வருகிறார்கள்.

சேது : நீ என்ன? இவளுக்குக் கொடுக்கா? ஓடுறீ...

தோழியை விரட்டுகிறான் சேது. குளோஸ் ஷாட் - தோழி போகிறாள்.

குளோஸ் ஷாட் - சேது : ஏய்... ஃபர்ஸ்ட் இயரா...?

குளோஸ் ஷாட் -'ம்' என்று தலையாட்டுகிறாள் அபிதா

குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா

சேது : வந்ததும் சீனியருக்குக் குட்மார்னிங் சொல்லிட்டுப் போகணும்னு தெரியாதா...?

குளோஸ் ஷாட் - அபிதா : குட் மார்னிங்

குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா

சேது: நல்லா, வெறப்பா போலீஸ்காரன் மாதிரி நின்னு சொல்லு.

குளோஸ் ஷாட் - அபிதா : குட்மார்னிங். சல்யூட் அடித்தபடி சொல்கிறாள்.

மிட் ஷாட் - சேது : டெய்லி இது மாதிரி வந்து சொல்லிட்டுப் போகணும். புரியுதா?

என்ற சேது, அபிதாவின் கையிலிருக்கும் நோட்டு, டிபன் பாக்ஸைப் பார்க்கிறான்.

சேது : அதைக் கொடு...

அபிதா நோட்டுப் புத்தகத்தைக் கொடுக்கிறாள். அதை விரித்துப் பார்க்கிறான் சேது. குளோஸ் ஷாட் - புத்தகத்தில் மயில் இறகு இருக்கிறது.

குளோஸ் ஷாட் - சேது : என்னது...?

குளோஸ் ஷாட் -அபிதா : மயில் இறகு

குளோஸ் ஷாட் - சேது : அது தெரியுது... அதை ஏன் இதிலே வச்சிருக்கே?

குளோஸ் ஷாட் - அபிதா : இல்ல... குட்டி போடும். அதான்....

குளோஸ் ஷாட் - சேதுவின் முகத்தில் புன்னகை அரும்புகிறது. குளோஸ் ஷாட் - அபிதா.குளோஸ் ஷாட் - நண்பன். குளோஸ் ஷாட் - நோட்டுப் புத்கத்திலிருந்து ஒரு இலையை எடுத்துக் காட்டி அபிதாவிடம் கேட்கிறான்.

சேது : அப்ப இது? முட்டை போடுமா?

குளோஸ் ஷாட் - அபிதா : ம்... ம்... இது படிப்பு இலை. இதை புக்ஸ்லே வச்சா நன்னா படிப்பு வரும்.

குளோஸ் ஷாட் - சேது. குளோஸ் ஷாட் - அபிதா

மிட் ஷாட் - சேது : அதைக் கொடு

புத்தகத்தை மூடி வைத்த சேது, அபிதாவின் டிபன் பாக்ஸை வாங்குகிறான். டைட் குளோஸ் ஷாட் -இருவரது கைகளும் ஏதேச்சையாக ஸ்பரிசிக்கின்றன. மிட் ஷாட் - சேது டிபன் பாக்ஸைத் திறக்கிறான். அபிதா பயந்து போய் நிற்கிறாள்.

சேது : தயிர் சோறு, மாவடு...! முட்டை, மீன் எதுவுமில்ல?

நண்பன் : பார்த்தாத் தெரியல? மாமி!

சேது : ... மாமியா...?

குளோஸ் ஷாட் - அபிதா. மிட் ஷாட் - சேது சாப்பிடுகிறான். நண்பன் சாப்பாடு கேட்டு கை நீட்டுகிறான்.

நண்பன் : எனக்கு

அவனுக்கு ஒரு கவளம் சாதம் கொடுக்கிறான் சேது.

குளோஸ் ஷாட் - அபிதா. மிட் ஷாட் -சேது சாப்பிடுகிறான். மறுபடி நண்பன் கை நீட்ட, சலிப்புடன் டிபன் பாக்ஸையே அவனிடம் கொடுத்துவிடுகிறான் சேது. கை துடைக்க அபிதாவின் நோட்டுப் புத்தகத்திலிருந்து

'
சரக்'கென்று பேப்பரைக் கிழிக்கிறான். பதறிப் போகும் அபிதா, தன் தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டுகிறாள். குளோஸ் ஷாட் - சஜஷன் - அபிதா.

சேது: பாப்பா பேரென்ன...?

குளோஸ் ஷாட் - அபிதா : அபிதகுஜலாம்பாள்...

குளோஸ் ஷாட் - சேது : ம்...?

குளோஸ் ஷாட் - அபிதா : அபிதகுஜலாம்பாள்.

குளோஸ் ஷாட் - சேது : அப்படீன்னா...?

குளோஸ் ஷாட் - அபிதா : அப்படின்னா... பேரு!

குளோஸ் ஷாட் - சேது : அது தெரியுது... அதுக்கு என்ன அர்த்தம்?

குளோஸ் ஷாட் - அபிதா : அர்த்தம்... தெரியாது...

குளோஸ் ஷாட் - சேது : எவன் உனக்கு இந்தப் பேர் வச்சான்...?

குளோஸ் ஷாட் - அபிதா : எங்கம்மா...

குளோஸ் ஷாட் - சேது : சரி நாளைக்கு வரும்போது உங்கம்மாகிட்டே இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு கேட்டு வந்து சொல்லு...

குளோஸ் ஷாட் - அபிதா : அம்மா இறந்துட்டாங்க.

குளோஸ் ஷாட் - சேது : ... மா மர்கயாவா...

உங்கப்பனாவது இருக்கானா? இல்லே அவனும் போய்ச் சேர்ந்துட்டானா...?

குளோஸ் ஷாட் - அபிதா : இருக்கார்...

குளோஸ் ஷாட் - சேது : அப்ப அவன்கிட்டே கேட்டு வந்து சொல்லு...

குளோஸ் ஷாட் - 'ம்...' என்று தலையாட்டுகிறாள் அபிதா.

குளோஸ் ஷாட் - சேது : போ...

மிட் ஷாட் - சேதுவின் நண்பன் நோட்டையும் டிபன் பாக்ஸையும் அபிதாவிடம் கொடுக்க அவள் போக முயலுகிறாள்.

நண்பன் : எக்ஸ்க்யூஸ் மீ...

சேதுவின் நண்பன் கூப்பிட நிற்கிறாள் அபிதா.

அபிதா : ம்...?

நண்பன் : உங்க மயில் இறகு குட்டி போட்டா நேக்கும் ஒண்ணு தர்றேளா...?

நானும் வளர்த்துக்கறேன்...

பெண்ணைப் போன்ற பாவனையுடன் கேட்கிறான் நண்பன்.

அபிதா : ம்...

நண்பன் : ரொம்ப டேங்க்ஸ்...

அபிதா போனதும் நண்பனை செல்லமாக அடிக்கிறான் சேது.

சேது: போடா... இப்படிப் பேசிப் பேசி ஒரு நாள் அஜக்காகவே மாறப் போறே...

அனைவரும் சிரிக்கின்றனர். சேது கீழே பார்க்கிறான்.

குளோஸ் ஷாட் - அபிதாவின் நோட்டிலிருந்த மயில் இறகு கீழே கிடக்கிறது

Related Posts:

  • How to set up a story? There's a law in physics called Newton's Third Law of Motion, which states that "for every action, there is an equal and opposite reaction.' Which means, basically, that everything is related. We exist in re… Read More
  • Screenplay page format and elements of Screen play Sample Screenplay PageThere is no hard and fast rule for how to format montages in screenplays. As with all formatting, the goal is to express what’s happening on screen as clearly and simply as possible, without breaking u… Read More
  • Sequence The screenplay is comprised of a series of elements that can be compared to a system, a number of individually related parts arranged to form a unity, or whole:  Like the solar system.  A screenplay is really… Read More
  • Define subject of a screen play.-Endings and Beginnings The subject of a screenplay is defined as the action—what happens—and the character—whom it happens to.  There are two kinds of action— physical action : a car chase and emotional action; a crying. &… Read More
  • Incident,inciting incident and key incident What is character but the determination of incident? And what is incident but the illumination of character?" Incident define as "a specific event or occurrence that occurs in relation to something … Read More

0 comments:

Post a Comment