தமிழ் நாடகத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. 2500 ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே நாடகம் பற்றிய குறிப்பு வருகிறது.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
என்பது தொல்காப்பியம்.
| ||||
தமிழ் நாடக இலக்கண நூல்கள் | ||||
தமிழ் நாடகக் கட்டமைப்பையும் ஒழுங்கு முறையையும் கூறும் நாடக இலக்கண நூல்கள் நிறைய உண்டு. முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல் ஆகியவை நாடக இலக்கண நூல்கள் ஆகும்.
| ||||
தமிழ் நாடகம் வளர்ச்சி நிலைகள் | ||||
தமிழ் நாடக வளர்ச்சி நிலைகளைச் சிலப்பதிகாரம் தான் முதன் முதலில் சுட்டிக் காட்டுகிறது. வேத்தியல், பொதுவியல் ஆகிய கூத்து வகைகளும் அகக்கூத்து, புறக்கூத்து ஆகியனவும் மாதவி ஆடிய பல்வகைக் கூத்துகளும் சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்றன. தமிழ் நாடக வளர்ச்சியில் இது முதல் நிலை.
பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, நிழற்பாவைக் கூத்து ஆகிய அடிப்படைகளில் தமிழ் நாடகம் வளர்ச்சி அடைந்தது இன்னொரு நிலை.
குறவஞ்சி, பள்ளு, நொண்டி நாடகம், விலாசம் எனக் கதைகளின் அடிப்படையில் நாடகம் வளர்ச்சி அடைந்தது மூன்றாம் நிலை.
இவை அனைத்தும் அடிப்படையாகக் கொண்டும் வட இந்தியாவிலிருந்து புதிதாக வந்த நாடக அமைப்புகளையும் தழுவிப் புதிய நாடக அமைப்பைப் பெற்றது
|
Monday, 7 July 2014
Home »
Performing Arts
» தமிழ் நாடகம்,நாடக இலக்கண நூல்கள்,வளர்ச்சி நிலைகள்
தமிழ் நாடகம்,நாடக இலக்கண நூல்கள்,வளர்ச்சி நிலைகள்
By J.P Josephine Baba Monday, July 07, 2014