Socrates

"The only true wisdom is in knowing you know nothing." 

Socrates

"To find yourself, think for yourself."

Nelson Mandela

"Education is the most powerful weapon which you can use to change the world."

Jim Rohn

"Success is nothing more than a few simple disciplines, practiced every day." 

Buddha

"The mind is everything. What you think, you become." 

Saturday, 25 January 2014

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005



தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005  இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள்.
அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும் தகவல் பெறும் சட்டத்தின் நோக்கங்களாகும். தகவல்களை பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்கவேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமை என இச்சட்டம் கூறுகின்றது.
தகவல் என்றால் பிரிவு 2 (1) இன் படி பதிவேடுகள்
ஆவணங்கள், குறிப்பாணைகள், மின்னஞ்சல்கள், கருத்துரைகள், அறிவுரைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், நாள்விவரக் குறிப்பேடுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், தாள்கள், மாதிரிகள், மாதிரிப் படிவங்கள், மின்னியக்க வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளத் தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள வேறு சட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் (அதிகாரிகள்) மேற்பார்வையிடும் அதிகார வரம்புக்குள் வரும் எவ்விதமான தனியார் குழும்மாக இருந்தாலும் அவைத் தொடர்பான செய்திகளும், தகவல்களும் இதில் அடங்கும்.
தகவல் பெற விரும்பும் நபர் ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது விண்ணப்பம் செய்யப்படும் நிலப்பகுதியின் அலுவல் மொழியில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் மத்தியப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லது மாநிலப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லது
மத்திய உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ(அதிகாரிக்கோ) அல்லது மாநில உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அனுப்பலாம்.
குறிப்பு-; தகவல் கோரும் விண்ணப்பத்தாரர், அத்தகவல் பற்றிய விபரங்களையும் அவரைத் தொடர்புக் கொள்வதற்கான முகவரியையும் தவிர வேறு விவரங்கள் எதையும் கொடுக்க வேண்டியதில்லை.
காலக்கெடு-; விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள். தகவல் அலுவலர் பதில் அளிக்கவேண்டும். குறிப்பு-; அவசரத் தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர் பதிலளிக்கவேண்டும்
இந்திய குடிமக்கள் எவருக்கும் பிரிவு 8 (1) இன் கீழ் பின்வரும் தகவல்களைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

() இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு நாட்டின் பாதுகாப்பு போர் யுக்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளி நாடுகளின் உறவு இவற்றைப் பாதிக்கும் குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்கள்,
() நீதிமன்றம், தீர்ப்பாயம் இவை வெளிப்படையாகத் தடை செய்துள்ளத் தகவல்கள் அல்லது நீதிமன்ற அவமதிப்பை உண்டாக்கும் தகவல்கள்.
() நாடாளுமன்றம் மற்றும் மாநில சிறப்புரிமைகளை மீறுமை செய்யும் தகவல்கள்.
() வாணிக நம்பகத் தன்மை, வியாபார இரகசியங்கள், அறிவு சார் சொத்துடைமை இவை வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்றாம் தரப்பினரின் சந்தைப் போட்டிக்குக் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள். இத்தகவல்கள் பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமாயதது என்று தகுத வாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவல்களை வெளியிடக் கூடாது.
() ஒருவருடைய பொறுப்புரிமை தொடர்பு உறவால் கிடைத்த தகவலை, பெரும்பான்மை மக்களின் நலனுக்கு இன்றியமையாதது என, தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவலை வெளியிடக்கூடாது.
() வெளிநாட்டு அரசுகளிடமிருந்து இரகசியமாகப் பெற்றத் தகவல்கள்.
() ஒரு நபரின் வாழ்வு அல்லது உடல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதை, தகவலின் மூலத்தை அடையாளப்படுத்துவதை அல்லது சட்டம் நடைமுறைப்படுத்துவதை அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக இரகசியமாக்கஃ கொடுக்கப்பட்ட உதவிக்கு ஆபத்து விளைவிப்பதை ஏற்படுத்தும் தகவல்கள்.
() புலனாய்வை அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதை அல்லது அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடர்வதைத் தடை செய்யும் தகவல்கள்.
() அமைச்சரவை செயலர்கள் மற்றும் பிற அலுவலர்கள் (அதிகாரிகள்) கலந்தாய்வுகளின் பதிவேடுகள் உள்ளிட்ட அமைச்சரவை ஏடுகள் வெளிப்படுத்தப்படுவதிலிருந்து விலக்குப் பெறுகின்றன.
குறிப்பு-; அமைச்சரவை முடிவுகள் எடுத்த பின்னர், அம்முடிவுகள் அவற்றிற்கான காரணங்கள், பின்புலங்கள் இவைகள் தடை செய்யப்பட்ட தகவல்களாக இல்லாதிருந்தால் பொது மக்களுக்குத் தெரிவிக்கலாம்.
() பொது செயல்பாட்டிற்கு, பொது நலனிற்கு தொடர்பில்லாத தனி நபரின் அந்தரங்கத்தில், நியாமற்ற முறையில் தலையீடு செய்யும் தனிநபரோடுத் தொடர்புடையத் தகவலைத் தெரிவித்தல் கூடாது.நாடாளுமன்றத்திற்கோ, மாநில சட்டப் பேரவைக்கோ மறுக்கப்படாத ஒரு தகவல் தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது.

மனித உரிமைகள்


 

மனித உரிமைகள் :கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், நகர்வுச் சுதந்திரம், கூடல் சுந்தரம், ஊடகச் சுதந்திரம், தன்னாட்சி உரிமை, நீதியின் முன் சமநிலை, சம சந்தர்ப்பம் போன்ற மனித உரிமைகள் வெறும் கருத்து நிலை உரிமைகள் மட்டுமல்ல.  மனித உரிமைகள் மனிதர்கள் அனைவருக்கும் இயல்பாக இருக்கும், விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத, சட்ட அரசியல் வடிவங்கள் உடைய உரிமைகள் ஆகும். 
 

·         மனித உரிமைகளை யாரும் பறிக்க முடியாது
·         இந்தியாவில் மனித உரிமைகள் இந்தியா வளர்ந்து வருகின்ற நாடு மற்றும் சுயாட்சி, மதசார்பற்ற, மக்களாட்சி குடியரசு மற்றும் இதன் முன்வரலாற்றில் காலணி ஆதிக்கத்தின் கீழிருந்தமை போன்ற நிலைகளை கடந்து வந்தாமையாலும், மிகப் பரந்த நிலப்பரப்ப்பையும் அதனுள் பல்வேறு மாறுபாடுகள் கொண்ட மக்களையும் உள்ளடக்கிய சூழல்களில் இந்திய நாட்டின் மனித உரிமைகளை பற்றி அலசுவது என்பது சற்று சிக்கலான விடயமாகும்.
·         இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகளான சமயசார்பு உரிமை, பேச்சுரிமை, செயலாட்சியர்கள் மற்றும் நீதிமுறைமைகள் , நாட்டின் பிறவிடங்களுக்கும் மற்றும் அண்டை நாடுகளுக்கும் செல்லும் உரிமை, போன்ற உரிமைகள் மனிதனின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுபவைகளாக அமைந்துள்ளன.

பண்பாடு



தன்னலத்தை புரக்கணித்து பொது நலத்தைப் பேண் அன்பு அருள், வாய்மை, தூய்மை, துப்புரவு, கண்ணோட்டம், சைகை, நாணம் முதலிய அனைத்து பண்புகளை அடிப்படையாக வைத்து தன்னுடைய சிறு சமூக எல்லைக்கோட்டைக் கடந்து உலக உறவாக வளர்வதே மனித குலத்தில் சிறந்த பண்பாகும்.
மனிதனுடைய அகவளர்ச்சியை பண்பாடு என்றும் புறவளர்ச்சியை நாகரீகம் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆங்கிலேய சொல்லான civilization என்பது நகர்புறத்துத் திருந்திய வாழ்வையே குறிக்கின்றது என அறிஞர் பாவாணர் விளக்குகின்றார்
லத்தீன் சொல்லான Civis, Citizen, Civils பின்பு ஆங்கிலத்தில் Civilize என்பதாயிற்று. நகரமே நாகரீக பிறப்பிடமாக தெரிகிறது. உலக பெரு நாகரிகங்கள் அனைத்தும் பேராற்றங்கரையிலேயே உருவாகின. நகர் +அகம்= நகரிகம்>நாகரீகம் என்றானது என்று அறிஞர் பாவாணர் குறிப்பிடுகின்றார்.

பக்குவப்பட்ட மனிதனை பண்பட்ட மனிதன், பண்பட்ட உள்ளமுடையோர்  என்போம். புலாVஆற்Kஆல் மக்கள் உள்ளமென்றும் நிலத்தை தம் கவிதையால் கொண்டு உழுது அறிவு விதைகளைத் தூவிப் பண்படுத்துகிண்ரார். வாழ்வின் பல போக்குகள் அமைந்து பலவேறு நிலைகளையும் பண்பாடு என்று குறிக்கின்றோம். உடலைப்பற்றிய நன்னிலை, மனத்தைப்பற்றிய தூய்மைநிலை, பேச்சின் இனிமை இவை எல்லாம் பண்பாட்டில் அடங்கும்.

மக்கள் வரலாற்றில் அவர்கள் இயற்றிக் கொண்ட கருவிகள் சமூகம், பழக்கம், நம்பிக்கை, சமயம் முதலியவற்றைப் பண்பாடு என்று குறிப்பிடுகின்றனர்.

ஒருவன் தன் குணநலன்களை நிரப்புவதிலும் தன்னைச் சூழ்ந்த சமூகத்தின் நலனைப் பேணுவதிலும் பேராவல் கொண்டிருக்கும் நிலை பண்பாடாகும்.-மாத்யூ ஆர்னால்டு
ஓர் இனத்தின் பண்பாடு அதன் இலக்கியம் நடையுடை, மொழி கலைகள் குறிக்கோள், சமயகொள்கை, அரசிற் கொள்கை அரசியல் வரலாறு சமுதாய் நிலை பெண்களின் நிலை, கல்வி நிலையம் மூலம் விளங்குகின்றது.Culture

தமிழ் நாடகம்




தனி மனித உணர்வுகள் இலக்கிய அந்தஸ்து பெற்ற போது காட்சி திறன் கொண்ட நாடகம் கருத்து தளத்தில் மாற்றம் கொண்டு வரும் தன்மையுள்ளது என புரிந்துகொண்டனர். 19 ஆம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சி பெர்னாட்ஷா இப்ஸன், செகாவ் போன்ற எண்ணற்ற நாடக ஆசிரியர்களை உலகிற்கு வழங்கியது.
இந்தியாயாவில் சிறந்த சமஸ்கிருத நாடகங்கள் எழுதப்பட்டிருந்தன. கூத்து ஜாத்ரா நௌசங்கி, தமாஷா போன்ற நாட்டுப்புறக் கலை மரபுகளின் வடிவாக்கத்தையே இந்திய நாடகம் சார்ந்திருந்தது. தமிழகத்தில் நடனத்திலிருந்து நாட்கம் தோன்றியதால் கூத்து கலைஞர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகவே மாறிவிட்டது. இலக்கியங்கள் என்பவை கல்வி அறிவு பெற்ற புலவர்களாலும் ஆடல் பாடல் சம்பந்தப்பட்ட கூத்து வகை நாடகங்கள் பாமரர்களாலும் மேற்கொள்ளப் பட்ட நிலையில் இங்கு ஒரு இடவெளி உருவாகி போனது.
நாடகம் என்பது மனத்தை கிளரச்  செய்து இன்பத்தைமூட்டிக் காமத்தை அதிகப்படுத்துவது என்று சமணம் போன்ற மதங்கள் பிரசாரம் செய்தன. இலக்கியம் என்பது அறிவாற்றல் கொண்ட செயல்பாடு போலவும் நாடகம் என்பது சாதாரண பெரும்திரள் மக்கள் (Populist) செயல்பாடு என்பது போலவும் ஒரு கருத்து தமிழ் சூழலில் உருவாக்கப்பட்டது.http://boffinnews.blogspot.in/2011/12/drama-program-in-tamilnadu-tamilnadu.html

 இருப்பினும் இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் பம்மல் சம்பந்த முதலியாரும் சங்கர தாஸ் சுவாமிகளும் தங்களுடைய சிறப்பான நாடகச் செயல்பாடுகளால் நாடகத்துக்கு ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்கினர். மதுரகவி பாஸ்கர தாஸ், விஸ்வநாத் தாஸ் போன்ற தேசிய நாடகவாதிகள் சுதந்திர போராட்டக் காலத்தில் நாடகத்தை ஆட்சியளர்கள் பயப்படும் அளவுக்கு மக்கள் முன் எடுத்து சென்றனர். பின்னர் திராவிட இயக்கம் அரசியலையே நாடக மேடையாக்கி புதிய சமூகநீதிக்கான குரலை நாடகம் ஊடாக எழுப்பி அரசியல் மாற்றதிற்கு அழைத்து சென்றது.
தமிழகத்தில் ந. முத்துசாமி, இந்திரா பார்த்த சாரதி, ஜெயந்தன் போன்ற நாடகக்காரர்கள் செயல்பாடுகள் ஆக்கபூர்வமாக இருப்பினும் நாடகத்தளத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை.
தரமான இயக்குனரின் நாடகம் புதிய உணர்வும் ஒவ்வொரு அசைவும் பொருளும் அர்த்தமிக்கதாக இருக்கும். திட்டமிட்டு நுட்பமாக வலிமையான அர்த்தங்கள் நிறந்து வடிவமைக்கப்பட வேண்டும். பெரும் பாலும் வார்த்தைகளில் நிற்காமல் காட்சிகளை நம்புபடியாக இருத்தல் வேண்டும்.நாடகத்தின் உள்ளடக்கம் தற்கால சூழலோடு பொருத்தி பாக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.dance