Wednesday, 7 October 2015

படுகளம்

https://www.youtube.com/watch?v=l6PGYO3gz9U

சூழ்ச்சியால் பொன்னர்,சங்கர் கொல்லபட்ட இடம்.மாசி மாதம் மஹாசிவராத்திலிருந்து 7 நாட்கள் விழா நடைபெரும்,7ஆம் நாள் விழா மிகவும் பிரசித்திபெற்றது,கோவிலைச்சுற்றி 25க்கும் மேற்பட்ட நாடகம் நடத்தப்படும்http://wikimapia.org/10120600/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

துரியோதனன் படுகளம் 

தமிழ்நாட்டின் வடபகுதியில், துரியோதனன் வதத்தை முன்வைத்து கிராமச்சடங்காக நிகழ்த்தப்படும்  நிகழ்வாகும் படுகளம்.

கூத்துப்பட்டறை நிறுவனரும் எழுத்தாளருமான ந.முத்துசாமி எழுதி அரங்கேற்றிய புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்று படுகளம். ந.முத்துசாமியின் புதல்வரும், அவருடைய நாடக இயக்கத்தில் பங்கேற்றவருமான ஓவியர் மு.நடேஷ், அந்த நாடகத்தை தன்னுடைய இயக்கத்தில் புதிய வடிவில் மார்ச் ஒன்றாம் தேதி மீண்டும் அரங்கேற்றினார்.
தமிழ்நாட்டின் வடபகுதியில், துரியோதனன் வதத்தை முன்வைத்து கிராமச்சடங்காக நிகழ்த்தப்படும் படுகளம் நிகழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நவீன நாடகம் இது. மகாபாரத காலத்துக்கும்,நிகழ்காலத்துக்கும் இடையிலான உரையாடலாக இந்த நாடகத்தைப் பார்க்கலாம். மகாபாரதத்தின் 18-ம் நாள் போராட்டக் களனாக வடிவம் கொண்டு அன்றைய நிகழ்வுகளைப் பின்பற்றிச் செல்லும் நாடகம் இது. திரெளபதியின் துகிலுரிப்பு, கற்புநிலை, பெண்ணுடல், கொண்டாட்டம், சண்டைகளை முன்வைத்து பாத்திரங்களின் உரையாடல்கள் சமகாலத்துக்குக் கொண்டுவருகின்றன. கூத்திசைத்தும், ஆடியும், ஓடியும் நாடகத்தைப் பல தளங்களுக்கு நகர்த்தினார்கள் நடிகர்கள். நடிகர்களும் சாதாரண உடையமைப்புடன் கடந்த காலத்தைச் சமகாலத்துக்கு இழுத்து வரும் முனைப்பு கொண்டிருந்தனர்.http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/article6971673.ece

0 comments:

Post a Comment