Socrates

"The only true wisdom is in knowing you know nothing." 

Socrates

"To find yourself, think for yourself."

Nelson Mandela

"Education is the most powerful weapon which you can use to change the world."

Jim Rohn

"Success is nothing more than a few simple disciplines, practiced every day." 

Buddha

"The mind is everything. What you think, you become." 

Wednesday, 15 January 2014

இந்திய தண்டனை சட்டம்-Indian Penal code


இந்திய தண்டனைச் சட்டம்(Indian Penal Code) குற்றவியல் சட்டத்தின் அனைத்து பிரத்தியேக அம்சங்களையும் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. இது 1860 ல் வரையப்பட்டு 1862 ல் பிரித்தானிய ஆட்சியின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது. இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவு லார்ட் மெக்காலேய் தலைமையில் இயங்கிய முதல் சட்ட ஆணையத்தால் தயாராக்கப்பட்டது. இது இங்கிலாந்து சட்டத்திலிருந்து அவ்வூரின் தனித்தன்மையைகளை விடுத்த பின் வந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டது. பிரெஞ்சு தண்டனைச் சட்டம் மற்றும் லூசியானாவின் லிவிங்ஸ்டன் சட்டத்திலிருந்து ஆலோசனைகள் எடுக்கப்பட்டு இது வரையப்பட்டது
இந்திய தண்டனைச் சட்டம் 1837 ஆம் ஆண்டு சபையில் இந்திய கவர்னர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது இந்திய சட்டவரையறை புத்தகதில் இடம் பெற 1860ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது.இது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களில் சிறந்ததாக கருதப்பட்டது .இது முக்கிய திருத்தங்கள் இல்லாமல் பல சட்ட வரம்புகளில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. மெக்காலேயின் காலத்தில் இல்லாத தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட நவீன குற்றங்கள் கூட இச்சட்டத்தின் கீழ் எளிதாக இடம்பெறுகிறது.



ஊடகம் சார்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 1860, கீழ்க்கண்ட குற்றங்களை உள்ளடக்கியுள்ளது.

 

பிரிவு 124A:  இராஜ துரோக குற்றம்

 சட்டபூர்வமாக இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பையும் விரோத உணர்ச்சியையும் தூண்டி விடுவதற்காக எழுத்தால் பேச்சால் ஜாடையால், படத்தால் அல்லது வேறு எந்த விதமாகவாது காரியம் ஆற்றுவது குற்றமாகும்


இந்த குற்றம் புரிபவர்களுக்கு ஆயுள் தண்டனையுடன் அபராதவும் விதிக்கப்படலாம் அல்லது 3 ஆண்டு சிறக்காவலும் அபராதவும் விதிக்கப்படும்

 

விளக்கம்

·         விரோதம்- தேசத்துரோகத்தையும் குறிக்கும்

·         சட்டத்துக்கு உட்பட்டு அரசாங்கத்தின் செயல்களை குறை கூறுவதும் கண்டிப்பதும் குற்றமாகாது

·       ஜனநாயக மரபுகளின் படி அரசின் நிர்வாக முறைகளைப் பற்றியும் கண்டனம் தெரிவிப்பது குற்றமாகாது

 

பிரிவு 153A(1): பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுமடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்

 

 

பிரிவு 153B(1): A பேச்சு எழுத்து அல்லது சைகை அல்லது காணத்தகும் பொருள்களின் மூலமாகவாவது அல்லது வேறெந்த விதத்திலாவது

 

அ. ஒரு சமய இன மொழி அல்லது சாதி சமூகம் ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கின்ற காரணம் காட்டி எவரேனும் சட்ட ரீதியாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசிடம் உண்மையான நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் இருக்க முடியாது அல்லது இந்திய அரசாட்சியின் உரிமையும் முழுமையாக நிலை நிறுத்த முடியாது என்கிற வகையில் குற்றச்சாட்டை செய்தாலும் சுமத்தினாலும்


B) சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி, சமூகம் அல்லது பிரிவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எவருக்கேனும் இந்தியாவின் குடிமக்கள் என்ற முறையில் அவர்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் பறிக்கப்பட வேண்டும் என்று உரைக்கிற அல்லது ஆலோசனை சொல்கின்ற பிரசாரம் செய்கின்ற அல்லது வெளியிடுகின்ற

 

C) சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி, சமூகம் அல்லது பிரிசவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எந்த ஓர் உறுப்பினருக்குரிய கட்டுப்பாடு பற்றி உரைத்தல், ஆலோசனை, கோரிக்கை அல்லது வேண்டுகோள் எதையேனும்வெளியிடுதல் ஆகியவற்றால் அந்த வகுப்பினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒற்றுமையின்மை பகை உணர்ச்சி அல்லது குரோதம் அல்லது வெறுப்பை உண்டாக்கும் விதத்தில் கோரிக்கை வேண்டுகோள், ஆலோசனை அறிவிப்பு வெளியிடுதல் போன்றவை குற்றமாகும்

மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

 

பிரிவு 292:

·     ஆபாசமான புத்தகத்தை, விளக்கத்தை, படத்தை, ஓவியத்தை, பொருளை அல்லது அமைப்பதும் விற்பதும் வாடகைக்குத் தருவதும் பிறருக்கு வழங்குவதும் பொதுமக்களுக்குக் காட்டுவதும் பொது மக்கள் அடையும் படி செய்வதும், உருவாக்குவதும், உற்பத்தி செய்வதும் தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.


·     அத்தகைய ஆபாசமான பண்டத்தை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக இறக்குமதி செய்வதும் ஏற்றுமதி செய்வதும் குற்றம்

·         

     மேலே கூறப்பட்ட ஆபாசப் பொருட்களை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக உண்டாக்கும் உற்பத்தி செய்யும், வாங்கும், வைத்திருக்கும், இறக்குமதி ஏற்றுமதி செய்யும், பிறருக்கு வழங்கும் அல்லது பொது மக்களின் பார்வையில் படும்படி அல்லது காட்டும் படி வைத்திருப்பது இதன் மூலம் வியாபாரத்தில் லாபம் பெறுவதும் குற்றமாகும்.


·       மேலே குறிப்பிட்டுள்ளபடி பிரிவின் கீழ் குற்றம் என்று கொள்ள தகும் எந்தக் காரியத்தையும் செய்கிறேன் அல்லது செய்ய தயாராக இருக்கிறேன் என்று விளம்பரம் செய்வதும் பிறருக்கு அறிவிப்பதும் குற்றமாகும்.இத்தகைய ஆபாசப் பொருட்கள் இன்னாரிடம் கிடைக்கும் என்று தெரியப்படுத்துவதும் குற்றமாகும்.

·         

     இந்த பிரிவின் கீழ் குற்றம் செய்ய முயற்சிப்பதும் குற்றமாகும்



மூன்று மாத சிறைக் காவல் மற்றும் அபராதம் விதிக்கப்படும்

 

விளக்கம்: மத சம்பந்தமான புத்தகம் வெளியீடு, எழுத்து, படம், ஓவியம் ஆகியவற்றிற்கும்; கோவிலில் அல்லது கோவில் ரதங்களில் பொறிக்கப்பட்டுள்ள செதுக்கப்பட்டுள்ள அல்லது உருவாக்கியுள்ளவற்றுக்கும் விளக்கப்பட்டுள்ளவையும் இந்த பிரிவில் பொருந்தாது

 

பிரிவு 292A: 292 ஆம் பிரிவுக்குத் தமிழ்நாடு அரசாங்கம் ஒரு திருத்தத்தை செய்கின்றது. அந்தத் திருத்தத்தின் படி இந்த குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்க்காவலல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்

 

பிரிவு 293: இதற்கு முன் சொல்லப்பட்ட பிரிவின்படி குற்றம் என்று கொள்ளத்தக்க ஆபாசப் பொருளை இருபட்து வயதுக்குக் குறைந்தவர்களுக்கு விற்பதும் வாடகைக்கு கொடுப்பதும் வழங்குவதும் காட்டுவதும் அவர்கள் மத்தியில் புழங்க விடுவதும் அல்லது அவர்களிடையே இத்தகைய செயல்களைப் புரிவதற்கு முயற்ச்சி செய்வதுன் குற்றமாகும். இந்தக் குற்றத்துக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் படி பொருளை கொடுப்பது மட்டுமல்ல பரப்பினாலும் தண்டனைக்கு உரிய குற்றமாகும். 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை கொடுக்கப்படுகின்றது


பிரிவு 294: பிறருக்குத் தொல்லை தரும் வகையில்
பொது இடங்களில் பாடலை பாடினாலும் வாசகத்தை உச்சரித்தாலும் , சொன்னாலும் மூன்று மாதம் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
295A: மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சீற்றமுற்று எழச் செய்ய வேண்டும் என்ற தீய கருத்துடன் வேண்டுமென்றே பேச்சாலோ, எழுத்தாலோ, அல்லது ஜாடையாலோ அவர்கள் மதத்தை அல்லது மத உணர்வுகளை புண்படுத்துவதும் அல்லது புண்படுத்த முயற்சி செய்வதும் குற்றமாகும். 3 ஆனண்டு சிறைத்தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்

 

 

 

இன்னும் சில பிரிவுகளுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்…………………..


 

அரசு கொள்கையின் நெறிசெய் நியதிகள் -DIRECTIVE PRINCIPLES TO STATE POLICY

இந்தியாவிலுள்ள மத்திய மாநில அரசுகள் மக்களைப் பாதுகாத்து நல்வழிப்படுத்த, எந்தக் கோட்பாடுகளை உள்ளடக்கி சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பதே அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்(Directive Principles) ஆகும். இது பற்றி நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்திய அரசியல் அமைப்பின் நான்காவது பகுதியில் அரசின் நெறிசெய் நியதிகள் என்ற தலைப்புடன் காணப்படுகின்றது. இப்பகுதியில் 16 திட்ட விதிகள் உள்ளது. இவை அரசு செயலாற்றும் பொழுது பின்பற்ற வேண்டிய கொள்கைகள் ஆகும்.

 

அரசு என்ற சொல்லுக்கு அரசியல் அமைப்பின் III வது பகுதியில் திட்டவிதி 12 இவ்வாறு விளக்கம் அளிக்கின்றது.இந்திய அரசாங்கம், பாராளுமன்றம், மாநில அரசாங்கள், சட்டமன்றங்கள்,ஆட்சி அமைப்புகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இயங்கும் இதர அதிகார அமைப்புகள் ஆகியவை அரசு என்பதில் அடங்கும். அரசியலமைப்பில் அரசு நெறிசெய் கொள்கைகள் மீறப்பட்டால் அமல் செய்தே ஆக வேண்டும் என எந்த நீதிமன்றத்தாலும் உத்தரவை பிறப்பிக்க முடியாது. ஆனால் நாட்டின் ஆட்சி முறையின் அடிப்படைகளாக விளங்குபவை இவை. அரசை கட்டுப்படுத்த சக்தி பெற்றிருக்கவில்லை என்றாலும் இவையை புரக்கணிக்க இயலாது ஏனெனில் இவை  புனிதமான பிரகடங்கள் என கூறப்படுள்ளது.

 

இவற்றை மூன்று தலைப்புகளில் வகைப்படுத்தலாம்

·         பொது உடமை கொள்கைகள்

·         காந்திய தத்துவங்கள்

·         முற்போக்கு கொள்கைகள் என அறியப்படுகின்றது

 

1.பொது உடமை கொள்கைகள்

  1. ·         ஆண்களும் பெண்களும் சமமான நிலையில் உரிமையினை பெறுதல்

  2. ·         வங்கிகளில் சொந்தமும் நிறுவாகமும் பொது நன்மையை மேம்படுத்தும் விதம் கட்டுப்படுத்தல்

  3. ·         உடமைகளும் உற்பத்தி சாதனங்களும் ஒரு சிலரிடம் குவியாவண்ணம் செயல் மேற்கொள்ளல்

  4. ·         ஆண்களும் பெண்களும் ஒரே விதமான வேலைக்கு ஒரே விதமாக ஊதியத்தை பெறுதல்

  5. ·         சக்திக்கும் வயதுக்கும் ஒவ்வாத வேலைகளை பொருளாதார நெருக்கடியால் மேற்கொள்ளுவதை தடுத்தல்

  6. ·         தொழிலாள மக்கள் வேலை செய்யும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, வேலை இல்லா திண்டாட்டத்தை நீக்க உதவுதல்,

  7. ·         முதுமை நிலையில் நோயுற்ற உடல் ஊனமடைந்த தொழிலாளர்களுக்கு உதவியளித்தல்

  8. ·         தொழிலாளர்கள் நியாயமான நல்ல வேலை செய்யும் சூழ் நிலையைப் பெற வகைசெய்தல்

  9. ·         தாய்மைப்பேற்றை அடைந்த பெண் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் தகுந்த ஓய்வு அளித்தல்.

2.காந்திய தத்துவங்கள்:

  1. கிராம பஞ்சயுத்துகளை அமைத்து அதிகாரம் கொடுத்து செயல்ப்பட வைத்தல் வேண்டும்

  2. கிராம குடிசைத் தொழில்களை கூட்டுறவு அடிப்படையில் வளர்த்தல்

  3. உழவு தொழில்களை கூட்டுறவு அடிப்படையில் வளர்த்தல்

  4. உழவு தொழிலையும் கால்நடைகளை பேணுவதையும் விஞ்ஞான ரீதியில் அமைத்தல் கால் நடைகள் வளர்த்தல், கொலை செய்தல் தடுத்தல்.

  5. கீழ் நிலையிலுள்ள அட்டனணை சாதியின் பொருளாதார நிலை கல்வி நிலை ஆகியவற்ற முன்னேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுத்தல்

  6. உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் போதை தரும் பானங்களையும் மருந்துகளையும் உபயோகிப்பதை தடை செய்தல்.

 

3.முற்போக்கு கொள்கைகள்

 

  1. மக்கள் பின்பற்ற தகுந்த உரிமை இயல் தயாரித்தல்

  2. 14 வயது வரையிலுள்ள சிறுவர்களுக்கு கட்டாய இலவச கல்வி அளித்தல்

  3. சத்தான உணவு வாழ்க்கைத்தரம் சுகாதாரம் மேம்படுத்தல்

  4. சர்வதேச அமைதி கௌரவ உறவு பேச்சு வார்த்தைகள் மூலம் சர்வ தேச பிரச்சனைகளை தீர்த்தல் என கொள்கைகள் வகுத்துள்ளது.

 

நெறி செய் நியதிகள் அரசியல் அமைப்பின் மற்ற விதிகளை மீற கூடாது.

நெறி செய் நியதிகளை அமல் செய்ய பிறப்பிக்கப்படும் ஆட்சித்துறை உத்தரவுகள் அரசியல் சட்டங்களை மீறும் வகையில் அமையக்கூடாது.

பொது நன்மைக்காக தனி நபரின் உரிமை நியாயமற்ர முறையீல் பரிக்கப்படலாகாது. ஆனால் தனி நபர் உரிமைகளை காப்பாற்ற வேண்டி பொது நன்மையை கைவிடப்படாது
இந்தப் பகுதியில் காணப்படும் கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவைகள்; இந்த கொள்கைகளின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது அரசின் கடமை” என்று கூறப்பட்டிருந்தாலும், “இந்த அம்சங்களை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்த முடியாது” என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்த அம்சங்களை நிறைவேற்றுமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது.

இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்

இந்தியாவின் வாழ்பவர்களுக்கான அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பின் பகுதி 3 ல் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் படி அனைவரும் அடிப்படை உரிமைகள் பெற்று இந்தியக் குடிமகன்களாக வாழ வகை செய்யப்பட்டுள்ளது,

இந்த உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்றமுறு செயல்களாக இந்திய தண்டணைச் சட்டக் (இ.த.ச) கூற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது. தனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அதை சுதந்திரமாக அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவ்வடிப்படை உரிமைகள் இனப்பாகுபாடின்றி (சாதி, நிறம், பாலினம்,மொழி), மொழி வேறுபாடின்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றை பெற்றுத்தர தயங்காது.

இந்த அடிப்படை உரிமைகள், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளைச் சார்ந்து இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.  டாக்டர்அம்பேத்கர் அடிப்படை உரிமையை, மனிதனின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார். அடிப்படை உரிமையை, நெருக்கடி கால அறிவிப்பின் மூலம், குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.

  1. சமத்துவ உரிமை (பிரிவு 14-18)
  2.  சுதந்திர உரிமை (பிரிவு 19-22)
  3.  சுரண்டலுக்கு எதிரான உரிமை (23-24)
  4.  சமய உரிமை (25-28)
  5.  பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (29-30)
  6.  தீர்வு பெறும் உரிமை (பிரிவு 32-25)

1.சமத்துவ உரிமை
  • பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சட்டத்தின் முன்பு சமத்துவத்தையோ சம பாதுகாப்பை அரசு மறுக்கக் கூடாது.
  • பிரிவு 15 – எந்த குடிமகனையும் மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றில் ஏதனையாவது காரணம் காட்டி அவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது.
  • பிரிவு 16 – பொது வேலைவாய்ப்பில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
  • பிரிவு – 17 தீண்டாமை ஒழிப்பு: தீண்டாதோர் என்று யாரையும் ஒதுக்கி வைத்தல் இச்சட்டத்தின் மூலம் அழிக்கப்படுகிறது. தீண்டாமை நடைமுறைப்படுத்தப் படுவதைத் தடுக்கிறது. தீண்டாமையின் மூலம் தகுதியிண்மை கடைப்பிடிக்கப்பட்டால் அது குற்றமாக கருதப்பட்டு தண்டிக்கப்படும்.

2.சுதந்திர உரிமை
  • பிரிவு 19 அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திர உரிமைகள்

    • அ.   பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம்
    • ஆ.   ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம்
    • இ.   குழுக்கள் – சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம்
    • ஈ.   இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்
    • உ.   நாட்டின் எந்தப்பகுதியிலும் சென்று தங்கி வாழ உரிமை.
    • ஊ.   எந்தத்தொழில், வேலை, வணிகம் மற்றும் வியாபாரம் செய்யும் சுதந்திரம் (மேற்கண்ட சுதந்திர உரிமை சில கட்டுப்பாடுகளைக் கொண்டது அவைகள் பற்றி பிரிவு 19 (2) முதல் (6) வரையிலான பிரிவுகள் விளக்குகின்றன) 
    •   

  • பிரிவு 20
    • அ.   ஒரு குற்றமென குற்றம் சாட்டப்பட்ட செயல் செய்யப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டத்தினை மீறிய குற்றத்தைத் தவிர வேறு எந்த குற்றத்திற்காகவும் ஒரு நபர் தண்டிக்கப்படக்கூடாது.
    • ஆ.   எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒரு முறைக்குமேல் குற்ற வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படக்கூடாது.
    • இ.   எந்த நபரையும் அவருக்கு எதிரான வழக்கில் ஓர் சாட்சியாய் அவரை இருக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.
  • பிரிவு 21.
    • எந்த நபரின் வாழ்க்கையையோ அல்லது தனி நபர் சுதந்திரத்தையோ சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர பிற வழிகளில் மீறப் படக் கூடாது.
  • பிரிவு 22 கைது மற்றும் தடுப்புக்காவல் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு

  • அ.   கைது மற்றும் தடுப்புக் காவலுக்கான காரணங்களை உடனே தெரிவிக்க வேண்டும். வழக்கறிஞரை கலந்தாலோசிக்க அவருக்கு உரிமை உண்டு.
  • ஆ.   3 மாதத்திற்குள் அறிவுரைக்கு குழுமத்தின் முன், தடுப்புக் காவலை உறுதிப்படுத்த வேண்டும்.
  • இ.   தடுப்புக் காவலை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உரிமை.

3. பிரிவு 23 சுரண்டலுக்கு எதிரான உரிமை.
  • மனித உடல் உறுப்புக்களை வியாபாரம் செய்வதையும், பிச்சை எடுக்க வைப்பதும் கட்டாய வேலை வாங்குவதையும் தண்டிக்கக் தக்க குற்றமாக சட்டம் கூறுகிறது.
  • பிரிவு 24: 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்த நிறுவனத்திலும் அல்லது வேறு தொழிலகம் எதிலும் வேலைக்கு வைக்கக் கூடாது.

25) சொத்துரிமை – கல்வியுரிமை – அடிப்படை உரிமைகள்?
  • சொத்துரிமை ஓர் அடிப்படை உரிமையாக பிரிவு 19 (1)ல் வைக்கப்பட்டு பின் 44வது சட்டத்தின் கீழ் நீக்கம் செய்யப்பட்டது. பிரிவு 300 இன் கீழ் சொத்துரிமை ஓர் சாதாரண உரிமை என்ற அளவில் தற்பொழுது சட்டத்தால் கூறப்படுகிறது.
  • கல்வியுரிமை ஓர் அடிப்படை உரிமையாக இருந்தது. பின்னர் அது ஆரம்பக் கல்விக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்பட்டது. 

இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படைக்கடமைகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி 5- இல்  அடிப்படைக்கடமைகள் பற்றி கூறுகிறது. இந்த அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்பில, இரசிய அரசியலமைப்பினைப் பார்த்து சேர்க்கப்பட்டது.
  • 1.   தேசியக்கொடியையும்,தேசிய கீதத்தையும் மதித்து நடக்க வேண்டும்.
  • 2.   எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதித்து பேண வேண்டும்.
  • 3.   சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்.
  • 4.   எல்லா குடிமக்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாட்டுக்காக தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
  • 5.   அனைவரும் சாதி,மத,மொழி,இன,எல்லை கடந்த சகோதர மனப்பான்மையை உருவாக்க வேண்டும்.
  • 6.   நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காக்க வேண்டும்.
  • 7.   காடுகள், நதிகள்,ஏரிகள் உள்ளிட்ட இயற்கையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்.
  • 8.   அறிவியல்,மனிதாபிமானம்,சீர்திருத்த உணர்வுகளை வளர்க்க வேண்டும்.
  • 9.   வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
  • 10.  குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தர வேண்டும்.