Socrates

"The only true wisdom is in knowing you know nothing." 

Socrates

"To find yourself, think for yourself."

Nelson Mandela

"Education is the most powerful weapon which you can use to change the world."

Jim Rohn

"Success is nothing more than a few simple disciplines, practiced every day." 

Buddha

"The mind is everything. What you think, you become." 

Sunday, 19 January 2014

இசையின் வரலாறு

தமிழ் மக்களின் வாழ்வோடு இசையும் இரண்டறக் கலந்திருப்பதை தொல்கப்பியமும் சங்கநூல்களும் காட்டுகின்றன.
பாணர்கள்: இசைக்கலைஞர்களை பாணர்கள் என்று அழைத்தனர். சில வள்ளல்களைச் சார்ந்து பாணர்கள் இருந்துள்ளனர்.மன்னர் அவைகளிலும் திருவிழாக்களிலும் பாடி மகிழ்வித்தனர். தலைமக்களிம்  தூதுவர்களாகவும் விளங்கினர். பெரும் நகரங்களில் பாணர் சேரிகள் இருந்தன. இவர்கள் அனைத்து மக்களாலும் எதிர் கொள்ளப்பட்டு பேணப்பட்டனர் என்று ஆற்றுப்படை நூல்க்ள் கூறுகின்றன.
சங்ககால இசைக்கருவிகள்
பண்டை இசைக்கருவிகளில் தலைமையானது யாழாகும்.
·         பேரியாழ்-பெரிய நரம்புகள் கொண்ட யாழ்
·         சீறியாழ்
இசைக்கருவிகள்
துளைக்கருவி
தோற்கருவி
கஞ்சக்க கருவி
நரம்புக் கருவி
குழல்
முழவு
பாண்டில்
யாழ்
கோடு
முரசு-காளையின் தோலால் அமைக்கப்பட்டது


தும்பு
பதலை-ஒரு புறம் மட்டும் இயக்ககூடியது



பறை-குறிஞ்சி நிலத்தோர் பயன்படுத்திய பறை



துடி


இசைநூல்கள்
முதுநாரை, பஞ்சகுருகு, பஞ்சபாரதீயம்
முதற்சங்க காலத்தில் வழங்கின நூல்
இசை நுணுக்கம்
சயந்தன் என்ற பாண்டிய இலவரசனால் இயற்றப்பட்டது
பஞ்சமரபு
அறிவனார் இயற்றியது
யாழ் நூல்
விபுலாநந்தர்
பாணர் கைவழி
வரகுண பாண்டியன்

ராமாயணத்திலும் இசையும் மன்னர்களும்: பல்லவ மன்னர்களில் முதலாம் மகேந்திரன், இராசசிம்மன் போன்றோர் இசைக்கலையை வளர்த்தனர். மகேந்திர பல்லவன்சங்கீரணம்என்னும் தாளத்தை கண்டறிந்தான். இசைப்பற்றிய கற்காசனத்தை குடுமியாள் மலையில் தோற்றுவித்தான்.பரிவாதினி என்னும் வீணையில் வல்லவனாவும் இருந்தான். இசை கலைஞர்களுக்கு சோளர் காலத்தில்கந்தர்வ கந்தருவிஎன்ற பட்டமளித்தனர். தஞ்சை கோயிலில் 48 ஓதுவார்கள் இருந்தனர். இக்காலத்து நூல்களான கம்ப பெரிய புராணத்திலும் இசை பற்றி செய்திகள் சொல்லப்பட்டிருந்தன. சோழர்களும் பாண்டியர்களும் வீழ்ச்சியுற்ற பின் நாயக்கர்கள் காலத்தில் தமிழ் இசை நலிவுற்று தெலுங்கு இசைகீர்த்தனைநுழைந்தது.

பக்தி இயக்கம்: ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசையால் பக்தி நெறியை வளர்த்தனர் பரப்பினர். இறைவனை எழிசையாகவும், ஒலியாகவும் கண்டனர். பக்தி இயக்கம் இசை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.
தமிழக இசை காப்பிய காலத்தில் துவங்கி விட்டது. சங்க காலத்தில் முளைகிழம்பி சிலப்பதிகாரக் காலத்தில் வளர்ந்து, தேவார திவ்வியப் பிரபந்த பாசுர காலங்களில் கிளையாகி கீர்த்தனை காலத்தில் வளர்ந்து எட்டியது.

தொல்காப்பிய காலம் 

சங்க இலக்கியம்  
கி.மு 350-100
சிலப்பதிகாரகாலம்
கி.பி 2
தேவார திவ்விய பிரபந்த காலம்
கி.பி 6,7,8,9(நாயன்மார்  ஆழ்வார் காலம்
கீர்த்தனைக்காலம்
கி.பி 17,18,19,20

புரந்ததாசரும் அன்னமாக்சாரியரும் கீர்த்தனையின் பிதாக்கள் என்பர்.
தேவாரங்களை நாயன்மர்களும் திவியப்பிரபந்தங்களை ஆழ்வார்களும் பாடினர்

ஆங்கில இசைத்தொடர்பால் தோன்றிய பாடல்கள்
மதுரை மணி ஐயரின் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
மதுரை மாரியப்பச் சாமியின் இங்கிலீசு நோட்டு
தஞ்சைவேதநாயகர் பாடிய ஆதாமுக்கு ஏவாளை, ஆதிதிவ்விய என்றும் பாடல்கள் பேண்டு இசை உணர்ச்சியால் மலர்ந்தவை.மற்றும் சில பாடல்கள் தியாகராச சுவாமிகளின் பாடலின் உருப்படியில் அமைந்தது
மேலும் சில தமிழ் இசையாளர்கள்
விஜய லட்சுமி நவநீத கிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி, எம்.எஸ் சுப்பு லட்சுமி, பட்டம்மாள், எம். எல் வசந்த குமாரி, சீர்காழி கோவிந்தராஜன், யேசு தாஸ், உணி கிருஷ்ணன் போன்றோர்
           
















Thursday, 16 January 2014

அவதூறு வழக்கு


பிரிவு 499:ஒருவருடைய நற்மதிப்பை கெடுக்க வேண்டும் என்ற கருத்துடன்  அல்லது அத்தகைய கேடு விளைவிக்கப்படும் என்று தெரிந்திருந்தும் யாரேனும் அவரைப் பற்றிப் பிறர் அறியும் படி பேச்சால் எழுத்தால் அறிகுறியால் அல்லது காட்சிப் பொருளால் வசை சாட்டுவதையும் வசை சாட்டி வெளியிடுவதையும் அவதூறு செய்தல் என்கிறோம்.
விளக்கம்:
  1. ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவருடைய நற்மதிப்புக்கு கேடு உண்டாக்கக் கூடிய வசை சாட்டினை அவர் இறந்த பிறகு கூறுவதும் குற்றமாகும். அவரது குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் கருத்துடன் அத்தகைய வசைச்சாட்டு வருவதால் அது குற்றமாகிறது.
  2. ஒரு கூட்டு நிர்வாகத்திலுள்ள கம்பெனி அல்லது பலர் கூடிக் குழுவாக இயங்கும் ஒரு குழு அல்லது சங்கத்தைப் பற்றி வசை சாட்டுவதும் அவதூறாகும்.
  3. பிறரை கேலி செய்வதும் இரு பொருள் தக்கதாக வரும் சொற்களை உபயோகிப்படுத்துவதும் வசைச் சாட்டும் அவதூறாகிறது.
  4. பிறருடைய கணிப்பில் ஒருவருடைய ஒழுக்கம் அல்லது அறிவைப் பற்றிய தாழ்ந்த எண்னத்தை உண்டாக்கக் கூடிய அல்லது ஒருவருடைய ஜாதி அல்லது தொழிலை இழிவுபடுத்தக்கூடிய அல்லது ஒருவருடைய நாணயத்தை குறைக்கக்கூடிய அல்லது அவருடைய உடல் அருவருக்கத் தக்க நிலையில் உள்ளது என்ற எண்ணத்தை உண்டாக்கக் கூடிய அல்லது மிகவும் அவமானகரமான நிலையில் உள்ளது என்று குறிப்பிடக்கூடிய வசைச் சாட்டு அவருடைய நற்மதிப்புக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்று கொள்ளப்படும்.
விதிவிலக்கு
1.   பொது மக்களின் நலன் கருதி ஒருவரைப் பற்றி உண்மையான வசைச் சாட்டினை வெளியிடுவது அவதூறாகாது.
2.   ஒரு பொது ஊழியரைப்பற்றி அவர் கடமையாற்றும் முறையைப் பற்றி அல்லதுஅலுவல்களைக் கவனிக்கும் அல்லது நடத்தும் வகையினைப் பற்றி நல்லெண்ணத்துடன் அபிப்பிராயமாகக் கூறப்படும் வசைச் சாட்டை அவதூறு என்று கொள்ளக்கூடாது
3.   நீதி மன்றத்தின் நடவடிக்கைகளைப் பற்றி அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பைப்பற்றி உள்ளதை உள்ளபடி வெளியிடுவது அவதூறாகாது.
4.   நீதி மன்றத்தில் முடிவு செய்யப்பட்ட வழக்கை பற்றி நல்ல எண்ணத்துடன் செய்யப்படும் விமரிசனம் அவதூறாகாது.
5.   பொது நிகழ்ச்சிகளைப் நாடகம், சினிமா, நடனம், பாடல் முதலியவை பற்றி நல்லெண்ணத்துடன் தெரிவிக்கப்படும் அபிப்பிராயங்களை அவதூறாக கொள்ள முடியாது. நக்கீரன் கோபால்
    தமிழக அரசு-பிரேம லதா 

  • பிரிவு 500: ஒருவர் மறொருவரை அவதூறு செய்தால் அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
  • பிரிவு 501:ஒருவரை அவதூறு செய்யும் பொருள் :எழுத்து, பேச்சு அவதூறு என தெரிந்தும் அதை அச்சிடுவதும் உருவாக்குவதும் குற்றமாகும். இரண்டு ஆண்டுகள் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
  • பிரிவு 502: அவதூறான பொருளை விற்பனை செய்வதும் விற்பனைக்குக் கொடுப்பதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
  •