Socrates

"The only true wisdom is in knowing you know nothing." 

Socrates

"To find yourself, think for yourself."

Nelson Mandela

"Education is the most powerful weapon which you can use to change the world."

Jim Rohn

"Success is nothing more than a few simple disciplines, practiced every day." 

Buddha

"The mind is everything. What you think, you become." 

Wednesday, 15 January 2014

தமிழக நாட்டுப்புற கலைகள்

ஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அச்சமூகத்தினைப் பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும். கலை என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், கலாச்சாரப் பாலமாகவும் திகழ்கின்றது. கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடு. குறிப்பாக நாட்டுப்புறக் கலைகள் நமது மண்ணோடு, நம்மோடு தொடர்புடையவை. நமது பாரம்பரியத்தையும் அடி ஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை. கலை, சமூக வளர்ச்சிக்கும், மன எழுச்சிக்கும் சிறந்த கருவி.பதிவு

நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது. இக்கலைகளே சமுதாயத்தின் ஆவணமாகத் திகழ்கின்றன. இக்கிராமியக் கலைகளே, தகவல் பரப்பும் ஊடகமாகவும் பழக்க வழக்கப் பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன.

இன்று தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியான தகவல் தொடர்பிற்கும் பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன. இம்மாறுதல் இயற்கையானதே.

நமது இந்தியக் கிராமங்கள் ஒவ்வொன்றும் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றினைக் கொண்டுள்ளன. இவை தனக்கே உரித்தான தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் கொண்டவை. வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் கலவையாக சில கலைகளை கிராமங்கள் நமக்கு அளித்துள்ளன. அவை பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி மன வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் வளம் சேர்ப்பனவாகும். ஒருங்கிணைந்த சமூக முன்னேற்றத்திற்கு உரம் சேர்ப்பதாகவும் அமைந்திருப்பதனை அறியமுடிகிறது.
இந்திய நாட்டுப்புறக் கலைகளில் தமிழக நாட்டுப்புறக் கலைகள் பல்வேறு வகைகளில் சிறப்பும் தனித்தன்மையும் கொண்டவை. இவைகளை

நிகழ்த்துக் கலைகள் (Preforming Arts)
நிகழ்த்தாத கலைகள் (Non-Performing Arts)
பொருட்கலை (material Arts)

என நாட்டுப்புறவியல் வல்லுனர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

பொதுவாக தமிழக நாட்டுப்புற கலைகள்:-

1.
ஒயிலாட்டம் 2. ஆலியாட்டம் 3. கோலாட்டம் 4. கரகாட்டம் 5. காவடி ஆட்டம் 6. கும்மி 7. வில்லுப்பாட்டு 8. தெருக் கூத்து 9. பாவைக் கூத்து (பொம்மலாட்டம்) 10. கனியான் ஆட்டம், 11. வர்மம் 12. சிலம்பாட்டம். 13. களரி 14. தேவராட்டம் 15. சக்கையாட்டம் 16. பொய்க்கால் குதிரை ஆட்டம் 17. மயிலாட்டம் 18. உறியடி விளையாட்டு (கண்ணன் விளையாட்டு) 19. தப்பாட்டம் 20. உக்கடிப்பாட்டு 21. இலாவணி 22. கைச்சிலம்பாட்டம் 23. குறவன் குறத்தியாட்டம் 24. துடும்பாட்டம் 25. புலி ஆட்டம் 26. பொம்மைக் கலைகள் 27. மண்பாண்டக் கலை 28. கோலக் கலை

இதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலைகள் உள்ளன. இந்தக்கலைகள் வெளியே தெரியாமல் உள்ளன. மேலும் நாடகம், வீதி நாடகம், இசை நாடகம், நாட்டிய நாடகம், பரதநாட்டியம், இசைச் சிற்பம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

கிராமியக் கலைகள்:-

ஒயிலாட்டம்

கிராமக் கோவில்களில் ஒயிலாட்டம் விழாக்காலங்களில் ஆடப்படுகிறது. இதிகாச புராண வரலாற்றுக் கதைகளே ஒயிலாட்டத்தில் பாடப்படும், கட்டபொம்மன், மதுரைவீரன், வள்ளி, திருமணம் கதைகள் இடம் பெறும். ஒயிலாட்டம் ஆடுபவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பர். காலில் சலங்கையும் கட்டியிருப்பர். கையில் ஆளுக்கொரு கைக்குட்டையைப் பிடித்து இருப்பர். நுனியில் பிடித்து அதை அழகாக வீசியபடியே பாடி ஆடுவர்.

கோலாட்டம்

கோலாட்டம் என்பது பெண்களுக்கென்றே உரிய ஆட்டமாகும். இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுகின்ற ஆட்டமே கோலாட்டம் ஆகும். சமுதாயத்தைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் கோலாட்டப் பாடல்கள் எழுதப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோலாட்டம் ஆடப்படுகிறது.

கரகாட்டம்

மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் கரகம் எடுப்பது தமிழ் நாடெங்கும் உள்ள வழக்கமாகும். மலர்களைக் கொண்டு அழகான ஒப்பனை செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் கரக ஆட்டமாகும். இறைவழி பாட்டுடன் தொடர்பு உடையது இந்த கலை பல்வகை வண்ண மலர்களால் போர்த்தப்பட்டு அழகாகச் செய்யப்பட்டிருக்கும். இந்த கரகாட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக ஆடுவது பல அடுக்குகள் கொண்ட கரகத்தைத் தாங்கி ஆடுவது கரகாட்டத்தின் தனிச்சிறப்பு.

காவடி ஆட்டம்

காவடியாட்டம் சமய உணர்விற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் நிகழ்த்தப்படுகிறது. காவடி, தண்டைக் கொண்டு ஆடுவதால் இவ்வாட்டம் காவடியாட்டம் எனப் பெயர் பெற்றது காவடி எடுத்து முருகக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாகக் காவடி ஆட்டம் நடைபெறுவது தமிழர்கள் மரபாகும். காவடியாட்டம் இறைத் தொடர்புடையது ஆதலால் பல கடுமையான நோன்புகளை மேற்கொண்டு காவடி எடுப்பர். கலைத்திறனும் ஆடல் நுட்பமும் இதில் மிகுதியாக இருக்கும்.

கும்மி

தமிழகமெங்கும் நிகழும் ஆட்டங்களில் கும்மியாட்டம் முக்கிய இடம் வகித்து வருகின்றது. கும்மிக்கென்று தனிமெட்டு உண்டு. ஒருவர் முதலில் பாட, அதனைத் தொடர்ந்து பெண்கள் குழுவாகச் சேர்ந்து பாடுவர்.

வில்லுப்பாட்டு

தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைகளில் மிகச் சிறந்தது வில்லுப்பாட்டு. வில்லுப்பாட்டு பிறப்பிடம் குமரி மாவட்டம் வில்லுப்பாட்டில் குறைந்தது ஐந்து பேர் இருப்பர். வில்லுப்பாட்டில் கதைப் பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். தலைவர் இருவர் கதையைப் பாட்டாகக் கூறிச் செல்லும்போது விளக்க வேண்டிய இடத்தில் விளக்கி, உரைநடையாக கூறுவர். தெய்வங்களின் வரலாறு. தெய்வ நிலை பெற்ற வீரர்களின் வரலாறு. அரசர்களின் வரலாறு இவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறவே வில்லுப்பாட்டு பயன்பட்டது. விழாக்களில் பாடப்பட வில்லுப்பாட்டு, இன்று இலக்கியம், அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் சமுதாயத் தலைவர்களின் வரலாறுகள் வில்லுப்பாட்டில் இடம் பெறுகின்றன. காந்தி மகான் கதையை மறைந்த கலைவாணர் பாமர மக்களிடையே பரப்பினார்.

தெருக்கூத்து

பிறநாட்டுப்புறக் கலைகளைப் போன்றே இதுவும் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்பு உடையது. திரௌபதி விழாக்களில், மாரியம்மன் விழாக்களில், சிவன், திருமால், கணேசன், ஆகியோருக்கு எடுக்கப்படும் விழாக்களில் தெரு கூத்தானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாற்பது கூத்து குழுக்கள் உள்ளன. தெரு கூத்து பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு நிகழ்த்தப்படுகிறது. தெருகூத்தில வரும் கதாபாத்திரங்களின் பண்புகளை வண்ணங்களும் ஒப்பனையும் வெளிப்படுத்தும், துரியோதனனுக்கு சிவப்பும், துச்சாதனுக்கு மஞ்சள், பீமனுக்கு மேகவண்ணமும், கிருஷ்ணனுக்கு பச்சையும், திரௌபதிக்கு இளஞ்சிவப்பும், அர்ச்சுனனுக்கு நீலமும் தீட்டுவர்.

தெருக்கூத்தில் முதன் முதலாக அரங்கினுள் நுழையும் பாத்திரம் கட்டியக்காரன் ஆவான். அவன் கூத்தின் நடுநாயகமான பாத்திரமாகி, அரசனைப் புகழ்பவனாகவும், தூதுவனாகவும், வேலைக்காரனகவும், கோமாளியாகவும், பொது மக்களுள் ஒருவனாகவும், மாறிமாறிப் பாடுவான். கூத்தைத் துவக்கி, காட்சிகளை விளக்கி கதைகளைத் தெரியப்படுத்தி அறிவுரைகளை தூவி, காலநேரச் சூழல்களை முறைப்படுத்தி வாழ்த்துக் கூறுவதுடன் கூத்தை முடிக்கும் பல வேலைகளையும் செய்கின்றவனாக கட்டியக்காரன் தெருக்கூத்தில் இடம் பெறுகிறான். கூத்தின் இறுதிக்கட்டம் பொது வசனம், முடிவுப்பாட்டு, மங்களம் பாடுவதோடு முடியும். தெரு கூத்தானது இவ்வாறு அனைத்து நாட்டுப்புற கலைகளுக்குச் சிறப்பு செய்வதனை காணலாம்.

பொம்மலாட்டம் (பாவைக்கூத்து)

பொம்மைகள் வைத்து நிகழ்த்துவதால் பாவைக் கூத்து எனப்படுகிறது. பொம்மைகள் தோல் பொம்மைகள், மண் பொம்மைகள் என இருவகைப்படும்.

தமிழ் நாட்டில் இக்கலை தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. பாவைகளை மரத்தாலும், தோலாலும் செய்து நூல்களைக் கட்டி ஒரு திரைக்குப் பின்னாலிருந்து ஒருவர் ஆடியசைத்துக் கதைகளை விளங்கச் செய்யும் நாட்டுப்புறக் கலைக்கு ''பாவைக் கூத்து'' எனப்பெயர்.

மரப்பாவைகள் நல்ல ஆடைகள் அணிவிக்கப் பெற்றிருக்கும் தரையில் புரளுமாறு ஆடைகள் பெரிதாக இருக்கும் காண்பதற்கு கால்களே இல்லாமல் மனப்பாவனையில் கால்கள் உள்ளது போல் காட்டப்பெறும். கயிறுகள் இன்றி பொம்மைகள் தாமே. இயங்குவதாக மனத்தோற்றத்தை முழுமையாகத் தோற்றுவிக்கிறபோது அது கலையாகிவிடுகிறது.

சிலம்பாட்டம்

சிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிலம்பம் சிறப்புற்று விளங்கினாலும் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் விளையாடும் சிலம்பாட்டமே சிறப்பானது. இதில் கம்பிகளைக் கொண்டு ஒலியெழுப்பி விளையாடுவர். இக்கலையைப் பயிற்றுவிக்கும் செயலைக் ''களிரிப்பயிற்று'' என்று கூறுவர். புத்த சமயத்துறவிகள் மூலம் இந்தப் போர்க்கலை žனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்றது என்பர் வரலாற்று ஆசிரியர்கள். இக்கலை சிறந்த மாற்றங்களுடன் ஜப்பான் நாட்டில் கராத்தே என்று அழைக்கப்படுகிறது.

பொய்க்கால் குதிரை

புராணக் கதைகளைப் பொய்க்கால் குதிரை ஆட்டத்தின் மூலம் நடித்துக் காட்டுவதுண்டு தஞ்சையை ஆண்ட மராட்டியர்களால் இக்கலை சிறப்புற்றது. ஆணும், பெண்ணும் பங்கேற்கும் இவ்வாட்டத்தில் ஆண் அரசர் வேடந்தாங்கியும், பெண் அரசி வேடந்தாங்கியும் ஆடுவர்.

கேரளா நாட்டு கதகளி பஞ்சாபி நாட்டுக் கதை ஆகியவற்றின் நடனக் கூறுகள் பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

உறியடி விளையாட்டு

உறியடி என்பது ஒரு கிராமியக் கலையாகக் கருதப்படுகிறது. உறியடி விழா என்பதும் கோவில் சார்ந்த கலையாகக் கருதப்படுகிறது. உறி 10 அல்லது 15 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும். உறியை அடிப்பவர் மூன்று அடி நீளமுள்ள கம்புடன் காத்திருப்பர்.

உடுக்கடிப்பாட்டு

மழையின்றித் தவிக்கும் காலத்தில் பல ஊர்களில் உடுக்கடிப்பாட்டு நடத்தப்படும் இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இக்கலை நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. காத்தவராயன் கதையைப் பாடுவதே பெரு வழக்கமாக உள்ளது.

புலியாட்டம்

தேரோட்டம், சாமி ஊர்வலம் போன்ற திருவிழா நிகழ்ச்சிகளில் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது. ஒருவர் புலி போன்ற வேடமிட்டு ஆடுவர். மற்றொருவர் வேட்டைக்காரன் போல் வேடமிட்டு ஆடுவர். இவ்விருவரும் சேர்ந்து ஆடும் ஆட்டந்தான் புலி ஆட்டம் என்பர்.நாட்டுப்புற கலைகள்

நன்றிமுனைவர் எஸ்உமயபார்வதி(