Pages - Menu

MAIN MENU

Tuesday, 21 January 2014

Film Media -Cinematograph Act 1952 திரைப்பட ஒளிபதிவு சட்டம் 1952



Section 3-Board Of Film Censors: பிரிவு 3 தணிக்கைக்குழு அமைத்தல் :பொதுமக்கள் பார்வைக்கு திரைப்படம் வரும் முன் 12 முதல் 25 நபர்கள் கொண்ட குழு பரிசோதித்து அரசு அட்டவணையில் பதிப்பிக்க வேண்டும்.
Section 4-Examination of Films and  5A Certification of film பிரிவு 4 திரைப்பட பரிசோதனை மற்றும் சாற்றிதழ் வழங்குதல்
§  ஒரு நபர் படம் வெளியிட விரும்பினால் குறிப்பிட்ட்  விண்ணப்பத்தை பிலிம் தணிக்கை குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
§   U மக்களின் பார்வைக்கு உரியது என்றால்  தடையில்லா சாற்றிதழ் யு வழங்குகின்றனர்
§  UA பெற்றோர் அனுமதி உண்டு எனில் 12 மேலுள்ள குழந்தைகளும் பார்க்க தடையில்லா சாற்றிதழ் வழங்குகின்றது
§  A முதியவர்கள் மட்டும் பார்க்ககூடிய படம் என்ற சாற்றிதழ்  அனுமதி வழங்குகின்றது
§  S சாற்றிதழ் பெற்ற திரைப்படம் குறிப்பிட்ட  தொழில் மக்கள்  மட்டும் பார்க்க அனுமதிக்கப்படுகின்றது
§  +12,+15 12, 15 வயதிற்கு மேலுள்ள குழந்தைகள் பார்க்கும் அனுமதி வழங்குகின்றது இப்பிரிவு
பிரிவு 5-Advisory Panels
§  ஆலோசனைக்குழு- மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவிடம் பொதுமக்கள் பார்க்ககூடிய சினிமாவா என்று பரிந்துரைக்க கூறுகின்றது
§  பரிந்துரைக்குழு- தேவை எனும் காண்பின் ஒரு பரிந்துரைக்குழுவை நியமிக்கின்றது
§  மண்டலநிர்வாகக்குழுவை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு.
§  ஒவ்வொரு பரிந்துரைக் குழுவும் படத்தை பற்றிய கருத்தை நிர்வாக சபையிடம் பரிந்துரைக்க கடமைப்பட்டுள்ளது.
§  பரிந்துரைக்குழுவினர் ஊதியம் இல்லாது கட்டணம் பெற்று கொண்டு வேலை செய்ய பணிந்துள்ளன்ர்
பிரிவு 5B-Principles for guidance in certifying filmsசாற்றிதழ் வழங்கும் நெறிமுறைகள்
§  படத்தின் ஏதாவது ஒரு பகுதி, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு, பாதுகாப்பு, பக்கத்து நாடுகளுடன் ஆன நட்புறவுக்கு , நல்லொழுக்கம் கெடுக்கும் விதம் அவதூறு , ஆபாசம் பரப்புவதாக  இருக்கும் பட்சம் வெளியிட தடை விதிக்கலாம்.
§  5B(1) மத்திய அரசு விதிகளுக்கு உட்பட்டதாக கண்டு கொண்டால் பொதுமக்கள் காட்சிக்கு வெளியிட அனுமதிக்கலாம்.
பிரிவு 5C-Appeals
§   ஏதாவது ஒரு நபர் படம் வெளியிடம் சாற்றிதழ் கோரி குழுவால் கிடைக்காத பட்சம் திருப்திகரமான பதில் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும் பட்சம் அடுத்த 30 நாட்களுக்கு  உள்ளாக கோரிக்கையை குழு விசாரணக்கு எடுத்து கொள்ளலாம்.
பிரிவு 5D- Constitution of Appellate Tribunal- மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
§  பரிந்துரைக்குழுவின் எதிராக ஒரு கோரிக்கை பதியும் பட்சம் மத்திய ரசு அரசு டில்லி அலுவலக அரசு ஆணையில் பதிப்பிக்கின்றது.
§  மேல் வழக்கு தீர்ப்பாயத்தில் தலைவர் மற்றும் நாலு  பேர் கொண்ட குழுவாக  இருக்கும்.  தலைவர் என்பவர் ஓய்வு பெற்ற நீதிபதியாக இருப்பார்.
§  தீர்ப்பாயம் மீண்டும் விசாரித்த பின்பு குழு எடுத்த முடிவு சரியாக காண்பின்  பரிந்துரை குழுவின் முடிவை சரிசெய்கின்றது
5E–Suspension and revocation of Certificate
 பிரிவு 5 E நிறுத்தி வைக்கல் தள்ளுபடி செய்தல்
§  மத்திய அரசால் பிரிவு 6(2) வின் கீழ் கிடைத்த எந்த  சாற்றிதழும்  சட்டத்தால் பரிந்துரைக்கப்படுவதில்லை.  அரசாணையில் வெளியிட்டதும்  நிறுத்தி  வைப்பதுடன் தடை செய்யப்படுகின்றது.
பிரிவு 6 – Revisional powers of the Central Government
குறிப்பிட்ட அனுமதி பெறும் வரை படம் வெளியிடும் அனுமதியும் நிறுத்தி வைக்கப்படுகின்றது. சாற்றிதழ் அனுமதிமதியை நிறுத்தி வைப்பதுடன் அரசாங்க அறிக்கையில் வெளீயிடுகின்றனர்.
கொடுக்கப்பட்ட யு,யுஎ, எஸ் சாற்றிதழுகள் சாற்றிதழாக கணக்காக்க படுகின்றது.

S 6A – Information and documents to be given to distributors and exhibitors with respect to certified films: பிரிவு 6A யின் கீழ் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கப்படும் தகவல்கள்
§  தலைப்பு,படத்தின் நீளம், எண் மற்றும் படத்தின் வகை குறிப்பிட்ட சாற்றிதழ் சினிமா விநியோகஸ்தரிடம் கொடுக்கப்படுகின்றது.
7A- Power of Seizure: பறிமுதல் செய்தல்
§  சட்டத்தின் கீழ் சாற்றிதழ் வழங்கப்பட்ட   திரைப்படம் சட்டத்தை மீறினால் இப்படத்தை பறிக்க எல்லாவித அதிகாரவும் பரிந்துரை சபை அல்லது மத்திய அரசுக்கு உண்டு.
7F –Bar of Legal Proceedings: பிரிவு 7F சட்ட நடைவடிக்கை
§  நல்லெண்ணத்தோடு இச்சட்டத்தின் கீழ் செயலாற்றும் மத்திய அரசு , பரிந்துரைக்குழு, சபை, அதிகாரிகள், எவரும் சட்டத்தின் அச்சுறுத்தலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
.
Section 11- licensing authority-  பிரிவு 11சாற்றிதழ் வழங்கும் அதிகாரம்
 சாற்றிதழ் வழங்க அதிகாரமுள்ள நபர் மாவட்ட நீதிபதி ஆவார்

No comments:

Post a Comment