சங்ககால
தமிழரின் சமய வாழ்வு சமய வாழ்க்கை நெறியாக இருந்ததை நிறுவனமக வளர் கப்பட்டு சமூகத்தை ஆட்டி படைக்கவில்லை.
நடுகல் வழிபாடு
இறந்தார்களுக்கு நடப்பட்ட
கற்களை வணங்கும் நெறியாகும். இந்த மரபு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்து 11 ஆம் நூற்றாண்டு வரை
இருந்துள்ளது. நடுகற்கள் ஊருக்கு புறம்பே தொலைவில் இருந்த திடல்களில் நடப்பட்டன.இத்தகு நடுகற்களை தெய்வமாக வழிபட்டு நாள் தோறும் பலியிடுவது மரபாக இருந்தது. தமிழ் நாட்டில் வணங்கப்படும் பல தெய்வங்கள் நடுகல் வழிபாட்டில் இருந்து தோன்றியவை. சாம்பான், இருளன்,சன்னாசி, மதுரை விரன் போன்ற காவல் தெய்வங்கள் இவ்வகையானவையே
வெறியாட்டு(ஆவேசம்)
மனிதன்
மேல் தெய்வம் ஏறி வருவது உண்டு என்ற நம்பிக்கையில் இருந்து உருவானது இது. ஆவேசம் என்றும் கூறுவர்.சங்ககாலத்தில் முருகனோடு தொடர்புடையதாக இருந்தது.வெறியாடும் போது ஆட்டு குட்டியை பலியிடுவது மரபாகும்.
வேதவேள்வி
ஆரிய
நாகரீக கலப்பினால் வேத வேள்வியும் இடம் பெற்றிருந்தது.
சங்க
கால விழாக்கள், கார்த்திகை, திருவோணம், பொங்கல், தைநீராட்டு, இளவேனில், திருப்பரங்குறைத்து விழா
No comments:
Post a Comment