இந்திய
அரசியலமைப்புச் சட்டம் பகுதி 5- இல் அடிப்படைக்கடமைகள் பற்றி கூறுகிறது. இந்த அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி
1976-ம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்பில, இரசிய அரசியலமைப்பினைப் பார்த்து சேர்க்கப்பட்டது.
- 1. தேசியக்கொடியையும்,தேசிய கீதத்தையும் மதித்து நடக்க வேண்டும்.
- 2. எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதித்து பேண வேண்டும்.
- 3. சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்.
- 4. எல்லா குடிமக்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாட்டுக்காக தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
- 5. அனைவரும் சாதி,மத,மொழி,இன,எல்லை கடந்த சகோதர மனப்பான்மையை உருவாக்க வேண்டும்.
- 6. நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காக்க வேண்டும்.
- 7. காடுகள், நதிகள்,ஏரிகள் உள்ளிட்ட இயற்கையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்.
- 8. அறிவியல்,மனிதாபிமானம்,சீர்திருத்த உணர்வுகளை வளர்க்க வேண்டும்.
- 9. வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
- 10. குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தர வேண்டும்.
No comments:
Post a Comment