Pages - Menu

MAIN MENU

Friday, 5 December 2014

a format of script

hitchcockexample

example 2லொக்கேஷன் - சென்னை - அவுட்டோர்
பகல் வெளிச்சம்
சம்பவ இடம் மழலையர் பள்ளி.
கதாபாத்திரங்கள் - மூன்று அல்லது நான்கு  வயது இளம்  குழந்தைகள் 30 பேர்.  ஆசிரியர்  தோற்றத்தில் மூன்று நடுத்தர வயது பெண்கள்.


சீன் -1

பரபரப்பு இல்லாத பிரதான சாலை. மரங்கள் அடர்ந்த ஒரு கட்டிடத்தின் லாங்க் ஷாட். 

இப்போது கேமரா ஜுமாகி அந்த கட்டிடத்தின் பிரம்மாண்ட தோற்றத்தை காட்டுகிறது. அதில் ஆதித்தியா மழலையர் பள்ளி என்ற பெயர் பலகை தெரிகிறது.

சீன் -2

வகுப்பறைகள் இருக்கும் நீளமான அந்த பள்ளி வராண்டாவில் கேமரா நகர்கிறது. 

வரிசையாக வகுப்பு அறைகள். முதல் வகுப்பு அறையை தாண்டும் போது ஆசிரியை பாடம் சொல்லி கொடுக்கும் குரல் ஒலிக்கிறது.

எ பார் ஆப்பிள், பி பார் பால், சி பார் கேட்.....!!

அடுத்த வகுப்பு அறையை கேமரா  கடக்கும் போது, வேறு ஒரு பெண் ஆசிரியை பாடம் நடத்தும் குரல் கேட்கிறது.


ஒன்

( ஒன் -  குழந்தைகள் கோரஸ் குரல் )

டூ

( டூ - குழந்தைகள் கோரஸ் குரல் )

த்திரி

( த்திரி- குழந்தைகள் கோரஸ் குரல் )

போர்

( போர்- குழந்தைகள் கோரஸ் குரல் )


அந்த நேரம், புடவை கட்டிய  இரு பெண் ஆசிரியைகள் கையில் பாலர் பள்ளி புத்தகம் வைத்து கொண்டு நடந்து வருகிறார்கள். அப்போது இருவரில் ஒரு ஆசிரியை, அருகில் வரும் ஆசிரியையை பார்த்து.....

விஸ்வருபம் பார்த்துட்டிங்களா என்கிறார்.

இம் ...பிரமாதமா இருக்கு... என்ற பதில் குரல் கொஞ்சம் தூரத்தில் கேட்கிறது.

சீன் -3

இடம் - வகுப்பறை, சுவற்றில் மழலையர் பள்ளிகளில் பயன் படுத்தும் போஸ்டர்கள் தொங்குகிறது.

இப்போது ஒரு வகுப்பறை. மாணவ மாணவிகள் தரையில் மேல் போடப்பட்ட பலகையின் மேல் அமர்ந்திருக்கிறார்கள். 

குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலை செய்து கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை புத்தகத்தை புரட்டி கொண்டிருக்கிறது, ஒரு குழந்தை படம் வரைந்து கொண்டிருக்கிறது.

சில  குழந்தைகள் ஆசிரியர் திசை நோக்கி இல்லாமல் வேறு வேறு திசைகளை பார்த்தபடி அமர்ந்திருக்கிறது.


அப்போது ஆசிரியை தனக்கு முன்னாள் இருக்கும் மேஜையின் முன்னால் வந்து குழந்தைகளை நோக்கி சொல்கிறார்.

செல்லங்களா... இன்னைக்கு அன்னையர் தினம். அன்னையர் தினம்னா.. அம்மாவுக்கு மதிப்பு அளிக்கும் நாள். 

இப்போ நான் ஒவ்வொருத்தரா   கூப்பிடுவேன். இங்கே வந்து உங்க அம்மாவை பத்தி சொல்லணும் சரியா? 

என்று சொன்னவர் சாந்தினி... நீங்க வாங்க முதல்ல.  என்கிறார்.


அந்த குழந்தை எழுந்து ஆசிரியருக்கு முன்னால் வருகிறது. அந்த குழந்தையை தூக்கி மேஜையின் மேல் நிற்க வைக்கிறார்.

அது தன் இரு கைகளால் தன் மினிஸ்கர்ட்டை பிடித்தபடி நிற்கிறது.  விலகி இருந்த குழந்தையின் சட்டையை சரிசெய்த படி ஆசிரியை அந்த குழந்தையிடம் கேட்கிறார்.

உங்க மம்மியை பத்தி சொல்லுங்க.

குழந்தை பதில் சொல்ல தெரியாமல் நிற்கிறது. 

மீண்டும் கெஞ்சலான குரலில்... சாந்தினியை அம்மா என்ன சொல்வாங்க? 

அந்த குழந்தை சற்று தயங்கி சொல்கிறது...  தங்கபொண்ணுன்னு சொல்வாங்க.

அப்பறம் என்ன சொல்வாங்க?

செல்லம்ன்னு சொல்வாங்க. 

அப்பறம்...

இம்.. பதில் சொல்லாமல் அந்த குழந்தை நிற்க, தரையில் இறக்கி விடுகிறார். அந்த குழந்தை போய் தன் இடத்தில் போய் அமர்ந்ததும், காவியா... நீங்க வாங்க.


காவியா குழந்தை முன்னால் வந்ததும், மேஜையின் மேல் தூக்கி நிற்க வைக்கிறார். அந்த குழந்தை தன் இரு கைகளையும் கட்டி கொண்டு நிற்கிறது.

ரிலாக்ஸ்... குழந்தையின் கைகளை பிரித்து இயல்பாக விடுகிறார்.

உங்க அம்மாவை பத்தி சொல்லுங்க.

எங்க அம்மா நிறைய சாக்லேட் வாங்கி தருவாங்க.

வேற..

நரி கதை சொல்லுவாங்க. 

அடடா அப்பறம்...

ஸ்கூல் பாடம் எல்லாம் சொல்லி தருவாங்க.

வெரிகுட் 

அந்த குழந்தையை இறக்கி விடுகிறார். அந்த குழந்தை தன் இடத்தில் போய் அமர்கிறது.

சுபா.. நீங்க வாங்க.

சுபா அருகில் வந்ததும்,  சுபாவை மேஜை மேல் தூக்கி நிற்க வைக்கிறார்.

அந்த குழந்தை கன்னத்தை சொரிந்து கொள்கிறது.

அப்போது உங்க அம்மாவை பத்தி சொல்லுங்க என்கிறார் ஆசிரியை.

என் அம்மா என் வயத்துக்குள்ளே  இருக்காங்க. என்று தன் வயிற்றை  காட்டுகிறது.

அச்சச்சோ... சுபா கண்ணு வயத்துக்குள்ளேயா அம்மா இருக்காங்க.

ஆமாம்... நான்... நான்... பிறந்த உடனே எங்க அம்மாவை தூக்கி முழுங்கிட்டேனாம். பாட்டி சொன்னாங்க.

ஆசிரியை கண்கள் கலங்குகிறது.


அவ்வளவுதான் கதை. இது உங்க மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துது. இப்படி உணர்வு பூர்வமா கதைக்களம் நகர்ந்தால் படம் பார்ப்பவரின் மனதை நம் வசப்படுத்தலாம்.

சரி.. இது இத்துடன் இருக்கட்டும். வேறு ஒரு விளக்கத்தோடு பின் சந்திப்போம்.http://jothidasudaroli.blogspot.in/2013/03/blog-post_7.html



No comments:

Post a Comment