இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவு லார்ட்
மெக்காலேய் தலைமையில் இயங்கிய முதல் சட்ட ஆணையத்தால் தயாராக்கப்பட்டது. இது இங்கிலாந்து சட்டத்திலிருந்து
அவ்வூரின் தனித்தன்மையைகளை விடுத்த பின் வந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டது. பிரெஞ்சு தண்டனைச்
சட்டம் மற்றும் லூசியானாவின் லிவிங்ஸ்டன்
சட்டத்திலிருந்து ஆலோசனைகள் எடுக்கப்பட்டு இது வரையப்பட்டது
இந்திய தண்டனைச் சட்டம் 1837 ஆம் ஆண்டு சபையில்
இந்திய கவர்னர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது இந்திய சட்டவரையறை
புத்தகதில் இடம் பெற 1860ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது.இது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த
சட்டங்களில் சிறந்ததாக கருதப்பட்டது .இது முக்கிய திருத்தங்கள் இல்லாமல் பல சட்ட
வரம்புகளில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. மெக்காலேயின் காலத்தில்
இல்லாத தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட நவீன குற்றங்கள் கூட இச்சட்டத்தின் கீழ்
எளிதாக இடம்பெறுகிறது.
ஊடகம் சார்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 1860, கீழ்க்கண்ட குற்றங்களை உள்ளடக்கியுள்ளது.
No comments:
Post a Comment