ஊடகங்களின் சட்டப்பூர்வ உரிமைகள் என்பவை விளக்கத்தின் அடிப்படையில் அமைந்தவையேயன்றி, சட்டப்படி வரையறுக்கப்பட்டவை அல்ல.
இந்திய அரசமைப்பு சாசனத்தில் எங்கேயும் ஊடகங்களின் உரிமைகள்
இவை என திட்டவட்டமாக சொல்லப்படவில்லை.
அமெரிக்க அரசமைப்பு சாசனத்தில் நாடாளுமன்றம் ஒருபோதும்
ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதையும் நிறைவேற்றாது என்று
உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
.
பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின்
அடிப்படையில்தான் ஊடகச் சுதந்திரம் விளக்கப்படுகிறது.
இந்திய குடிமக்கள் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடுவதற்கு,
குறிப்பிட்ட கட்டுப்பாடுகளோடு சுதந்திரம் அளிக்கும் பிரிவுகளில் ஒன்றாகவே கருத்து
வெளிப்பாட்டுச் சுதந்திரமும் இருக்கிறது.
அரசமைப்பு சாசனத்தில் குறிப்பாக வரையறுக்கப்படாத ஒரு
சுதந்திரத்தை ஒரு அறம் சார்ந்த உயர்ந்த இடத்தை ஊடகங்களுக்கு
அப்படி வழங்கியவர்கள் மக்கள்
தான்.
சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்,
சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தை மேம்படுத்தும், சுதந்திரமான ஊடகம்தான்
ஜனநாயகத்தின் ரத்தமும் உயிர்த்துடிப்புமாக இருக்க முடியும் .
No comments:
Post a Comment