இந்தியாவில் இணைய தணிக்கை மத்திய மற்றும் மாநில
அரசுகள் இரண்டிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறையில் நடந்துவருகின்றது. இணைய
உள்ளடக்கத்தின் அணுக்களை தடுக்க பெரிய அளவில் தடை இல்லாத போது; ஆபாசமான அல்லது
மறுக்கக்கூடிய, அல்லது பொது ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்பு அபாயத்திற்கு
ஆட்படுத்தும் உள்ளடக்கத்தை அகற்றும் நடவடிக்கைகள் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும்
பொதுவானதாக இருக்கிறது. எனினும், அரசு அல்லது இணைய சேவை வழங்குநர்கள் மூலம்
தடுக்கப்பட்ட எந்த வலைத்தளங்களும் எளிதாக பதிலி பரிமாறிகளில் (ப்ராக்ஸி சர்வர்கள்) மூலம் அணுக முடியும்.
இணைய வடிகட்டி திறந்த இணையம் முனைப்பு(ONI) ஓஎன்ஐ இந்தியாவை பற்றி இவ்வாறாக
விவரிக்கிறது. இந்திய
பத்திரிகை சுதந்திரம் ஓர் வலுவான பாரம்பரியம் கொண்டது எனினும், இணைய வடிகட்டலில்
அதன் ஆட்சி தொடர்கிறது. பெரும்பாலும் பாதுகாப்பு என்ற பெயரில் வலைப்பதிவுகள்
மற்றும் பிற உள்ளடக்கம், இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட தணிக்கை முறை கணிசமான
எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. இந்திய
ஐஎஸ்பி (ISP) நிறுவனங்கள் அதிகாரிகளால் அடையாளம் கண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வலை
தளங்களை தொடர்ந்து வடிகட்ப்படுகின்றன. இந்திய ஜனநாயக தேசிய பாதுகாப்பு கொள்கை,
கருத்து சுதந்திரம் மற்றும் இணையதள பயணர்களின் தனிப்பட்ட சேகரிப்புகள் ஆகியவற்றை
குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
வலை 2012-ம் ஆண்டு Freedom
House's (சுதந்திரம் ஹவுஸ்ஸின்) அறிக்கையின் படி
·
இந்தியாவின்
ஒட்டுமொத்த இணைய சுதந்திர நிலைமை, 2009-ம் ஆண்டிலிருந்து மாறாமல் "பகுதி
சுதந்திர"மாக இருக்கிறது.
·
அளவுகோலான
(பெரும்பாலான சுதந்திரம்) 100 (குறைந்தபட்ச சுதந்திரம்) இதில் இந்தியா 39-ம்
எண்ணைப் பெறுகிறது. இது இந்தியாவை உலகளாவிய 47 நாடுகளில் 20-வது இடத்தில்
வைக்கிறது,
·
ஆசியாவில்
பதினொரு நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது என 2012-ம் ஆண்டு
அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. 3/11
·
2008-ம்
ஆண்டிற்குமுன், இந்திய அரசாங்கத்தின் இணைய உள்ளடக்கத்தின் தணிக்கை ஒப்பீட்டளவில்
அரிதாகவும் இங்குமங்கும் இருந்தது. மும்பையில் நவம்பர் 2008 பயங்கரவாத
தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய பாராளுமன்றம் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில்
(ITA) திருத்தங்களை நிறைவேற்றியது. இது அரசாங்கத்தின் தணிக்கை மற்றும் கண்காணிப்பு
திறன்களை விரிவடையச் செய்தது.
இலக்க முறை(டிஜிட்டல்) கையெழுத்து, பாதுகாப்பு,
மற்றும் திருட்டு செய்தல் (ஹேக்கிங்) உள்ளிட்ட இணைய பயன்பாடு மற்றும் வர்த்தகத்தை,
கட்டுப்படுத்த ஒரு சட்ட கட்டமைப்பை அளிக்க ஜூன் 2000-ம் ஆண்டில் இந்திய
பாராளுமன்றம் தகவல் தொழில்நுட்ப (IT) சட்டத்தை உருவாக்கியது.
சட்டம் மின்னணு ஆபாச தகவல்களை வெளியிட குற்ற
நடவடிக்கையாக்குகிறது. மேலும் சட்டத்தை மீறும் தனிநபர்களை கைது செய்யவும்
எவ்விடங்களையும் ஒரு ஆணை இல்லாமல் தேடவும் காவலர்களுக்கு (போலீஸுக்கு) அதிகாரங்களை
வழங்குகிறது.
தகவல்
தொழில்நுட்ப சட்டத் திருத்தம்(2008) : இணைய
தளங்கள் மற்றும் உள்ளடக்கம் மேலும் தூண்டக் கூடிய அல்லது குற்றமுள்ளதாகக்
கருதப்படும் குற்ற செய்திகளை தடுக்க அரசு அதிகாரத்தை வலுப்படுத்தியது.
இணையக் கடைகள் உரிமம் பெறுதல், இணையக் கடைக்கு வருபவர்களுக்கு உத்தேசமான
அடையாள அட்டைகள், சிறார்களுக்கு பொது இடங்களில் கணினிகளில் பயன்படுத்த மற்றும்
இணையக் கடைகள் மூலம் பயன்படுத்த, இணைய நெறிமுறை (IP) பதிவுகள் பராமரிப்பு போன்ற
பகுதிகள் தொடர்பான பரிந்துரைகளை ஆய்வு செய்கிற ஒரு அறிக்கையை இக்குழு வெளியிட்டது.
மேலும் இணையச் சேவை வழங்கிகள் சரியான நேரத்தில் பதிவுகள் மற்றும்
ஆவணங்கள் வைத்திருக்க வேண்டுமென பரிந்துரைத்தது.
இணைய
சேவை வழங்குநர்கள் ஒவ்வொரு இணைய இணைப்புக்கும் பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள்
வழங்க வேண்டும் என்று அறிவுரைத்தது.
காவலர்களுக்கு தொழில்நுட்ப அறிவு இல்லாதது ஒரு
பிரச்சினையென இக்குழு அடையாளம் கண்டது. அறிக்கை நீதிமன்றங்களால் நன்றாக
வரவேற்கப்பட்டது. அதனுடைய பரிந்துரைகள் காவலர்கள் மற்றும் இணையக் கடைகளால்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இணையக்
குற்ற தனிப்பிரிவு குழுவின் பரிந்துரைகேற்ப அமைக்கப்பட்டது.
2003-ல் இந்திய அரசு இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்த "செயல்திறனுடன்
நடவடிக்கை மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பு மூலம் இந்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல்
உட்கட்டமைப்பு பாதுகாப்பை மேம்படுத்த" இந்திய கணினி அவசரநிலை பிரதிசெயல்(CERT-IN)
நிறுவனத்தை நிறுவியது. அனைத்து உரிமம்
பெற்ற இந்திய ஐஎஸ்பி-க்கள் சிஇஆர்டி-இன் முடிவுகளுக்கு இணங்க வேண்டும். மறு ஆய்வு
அல்லது முறையீடுகள் இல்லை. இது குறிப்பிட்ட வலைத்தளங்களில் அணுகளை தடுக்கிறது மற்றும் வேண்டுகோள்களை மறு ஆய்வு
செய்கிறது. தொலைத் தொடர்பு துறைக்கு (DOT) தடை உத்தரவுகளை வழங்கும் தனி
அதிகாரத்தைப் பெற்றது.
2011-ம்
ஆண்டதழுவிய புதிய தகவல் விதிகள்
தகவல் தொழில்நுட்ப சட்டம்(2000)த்திற்கு (ITA) ஒரு
நிகராக "2011 தகவல் விதிகள்" ஏற்கப்பட்டன.
1.
அதிகாரிகளால்
ஆட்சேபணைக்குரியதாக கருதப்படும் குறிப்பாக "சிறார்களுக்குத்
"தீமையானது", "வெறுப்பானது", தீங்கானது", அல்லது
"பதிப்புரிமையை மீறுவதாக" உள்ளதாக இருக்கும் எந்த உள்ளடக்கத்தையும் இணைய
நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்ட 36 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என
தேவையளிக்கிறது.
2.
இணையக்கடை
உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை பாதுக்காக்க வேண்டும். அவர்களுடைய
கடைகளை எப்படி அமைக்கவேண்டும், அனைத்து
கணினி திரைகளும் பார்வையில் படும்படி இருக்கவேண்டும்.
3.
வாடிக்கையாளர்களின்
அடையாளங்கள் மற்றும் அவர்களின் உலாவல் வரலாற்றின் பிரதிகளை ஒரு ஆண்டு வரை
வைத்திருக்கவேண்டும். இவ்வகைப் பதிவுகளை ஒவ்வொரு மாதமும் அரசுக்கு அனுப்பி வைக்க
வேண்டும் போன்ற பரைந்துரைகள் உள்ளன.
தடை செய்யப்பட்ட இணையதளங்கள்
1999-ல் டான் இணையதளம் : 1999-ல் கார்கில் போருக்கு பின்னர், பாகிஸ்தானின் தினசரி செய்தித்தாள் டான் வலைத்தளம் இந்தியாவில் உள்ள விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட், நிறுவனத்தால் அணுகளில் இருந்து
தடைசெய்யப்பட்டது.
ரீடிஃப்,,:அரசுக்கு
சொந்தமான தொலை தொடர்பு நிறுவனம் ஆகும் விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட். அந்த
நேரத்தில் இந்தியாவில் சர்வதேச இணைய வழித்தடங்களின் ஏகபோக கட்டுப்பாட்டைக்
கொண்டிருந்தத ரீடிஃப்,, என்ற வடிகட்டியை புறந்தள்ளிவிட்டு தளத்தைப்
பார்ப்பது என்ற விரிவான தகவல்களை வெளியிட்டது.
2003-ல் யாகூ குழுக்கள் தடைசெய்யப்பட்டன.:யாகூ குழுமத்தில்" மேகாலயாவின் ஒரு சட்ட விரோத, சிறிய பிரிவினைவாத குழு, 2003-ல்,
க்யின்ஹுன் (Kynhun), இணைக்கப்பட்டது. தொலைத்தொடர்பு
துறை இக்குழுவைத் தடுக்க இந்திய ஐஎஸ்பி-க்களைக்
கேட்டுகொண்டதுடன் சுமார் இரண்டு வாரங்களுக்கு அனைத்து யாஹூ குழுக்களையும் தடை
செய்ய வழிவகுத்தது.
ஜூலை 2006-ல் இந்திய அரசு ஜியோசிட்டீஸ் (Geocities), பிளாக்ஸ்பாட் (Blogspot) மற்றும் டைப்பேட் (TypePad) களங்களில் உட்பட 17 வலைத்தளங்களை தடைசெய்ய
உத்தரவு பிறப்பித்தது.
2011-ல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பரவலாக
பயன்படுத்தப்படும் ஒரு ஐஎஸ்பி, டான் 2 (Don 2) என்ற திரைப்படம் வெளியிடுவதற்கு பல நாட்களுக்கு முன் அதன்
திருட்டைத் தடுக்க ஒரு தில்லி நீதிமன்றத்தில் ஜான் டோ ஆணை (John Doe) பெற்றுக் கொண்டு கோப்புப் பங்கீடு செய்யும்
தளங்களை அணுக மீண்டும் தடை செய்தது.
2012-ல் தொடங்கி, விமியோ, பைரட்
பே (Pirate Bay), டோரென்ஸ் (Torrentz) மற்றும் பிற வேகமாக
வளரும் தளங்கள் (Torrent)உட்பட இணையதளங்களை எந்தக் காரணங்களும்
கூறாமல் அல்லது முன் எச்சரிக்கை இல்லாமல் தொலைத்தொடர்பு துறையிடமிருந்து வந்த
உத்தரவின் பேரில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தடை செய்தது என குற்றம்
சாட்டப்படுகிறது.
இந்திய அரசு, இரண்டு தில்லி சார்ந்த
பத்திரிகையாளர்கள் காஞ்சன்
குப்தா மற்றும் சிவ் அரூர் - - மற்றும் பிரவின் தொகாடியா ஆகிய இவர்களின் கடிந்துகொள்ளல் twitter கணக்குகளைத் தடுக்க
இணைய சேவை வழங்குநர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசாங்கம்தேசிய சுயசேவை சங்கம் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்) மற்றும் பல வலதுசாரி
வலைத்தளங்களை தடை செய்தது.
மேலும், விக்கிப்பீடியா,-வின் கட்டுரைகள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஃபஸ்ட்போஸ்ட் (Firstpost), டெய்லி
டெலிகிராஃப்
மற்றும் அல்ஜஜீரா
வலைத் தளங்களில் உள்ள அசாம் வன்முறை செய்தி
அறிக்கைகள் தடை செய்யப்பட்டன.
ஊழலுக்கு
எதிரான கேலிச்சித்திரங்கள் மீது தடை: ஊழலுக்கு எதிரான கார்ட்டூன் வலைத்தளத்தை, டிசம்பர் 2011 இல்,
மும்பை குற்ற கிளையால் தடுக்கப்பட்டது.அரசியல்
கேலிச்சித்திரம் வரைபவர் அஸீம் திரிவேதி ஊழல் அமைப்பு
மற்றும் ஊழல் அரசியலை இலக்காக வைத்து தீவிர ஊழல் எதிர்ப்பு கேலிச்சித்திரங்கள்
கொண்ட ஒரு வலைத்தளம் www.cartoonsagainstcorruption.com தொடங்கினார். அஸீம்
திரிவேதி அவருடைய வலைத்தளம் மும்பை குற்றப்
பிரிவால் நிறுத்திவைக்கப்பட்டது.
டிசம்பர் 5,
2011-ல், நியூயார்க் டைம்ஸ் இந்தியா இங்க் (The New York Times India
Ink) ; "கூகுள், ஃபேஸ்புக் மற்றும் யாகூ! உட்பட பல சமூக ஊடக தளங்கள் மற்றும் இணைய நிறுவனங்கள்
"இந்திய பயனர் உள்ளடக்கத்தை முன் பார்வையிட்டு இழிவுப்படுத்தும்,
தூண்டக்கூடிய அல்லது தீங்கான உள்ளடக்கத்தை உடனுக்குடன் வெளியிடுவதற்கு முன் தடை
செய்ய வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டிருந்ததை அறிவித்தது."
.
உங்கள் குரலை காப்பாற்று என்பது இந்தியாவில் இணைய
தணிக்கைக்கு எதிரான ஒரு இயக்கமாகும். இது
கேலிச்சித்ரதாரி அஸீம் திரிவேதி மற்றும்
பத்திரிகையாளர் அலோக் தீட்சித்இவர்களால் ஜனவரி 2012- ல் நிறுவது. இந்த இயக்கம் இந்திய
தகவல் தொழில்நுட்ப சட்டத்தை எதிர்க்கிறது. மற்றும் இணையத்தின் நிர்வாக ஜனநாயக
விதிகளைக் கோருகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் கீழ் உள்ள கடுமையான
விதிகளை இந்தப் பிரச்சாரம் குறிவைக்கிறது.
கேரளா-சூரியநெல்லி
பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பி.ஜே.குரியனுக்கு ஆதரவாக இருக்கும் மகளிர்
காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணாவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து எழுதிய; அதை
ஷேர் செய்துகொண்ட 140 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது கேரளக் காவல்
துறை. சமூக இணையதளத்தில் சொன்ன கருத்துக்காக இத்தனை அதிகம் பேர் மீது வழக்குப்
பதிவு செய்யப்படுவது இந்தியாவில் இதுவே
முதல்முறை.
அதே போல் சற்று முன்னதாக, பின்னணிப் பாடகி மற்றும் தொலைக்காட்சி
பிரபலமான சின்மயி கொடுத்த புகாரின்படி, காவல்துறை ஒரு கல்லூரிப் பேராசிரியரை கைது
செய்தது. சம்பந்தப்பட்ட கல்லூரிப் பேராசிரியர் சின்மயியை பற்றி அவதூறான, இழிவான
செய்திகளை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டதாக குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது. அவரும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ்
காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதே போல் புதுச்சேரியை சேர்ந்த ரவி என்ற தொழிலதிபரைக் காவல்துறை கைது
செய்தது. ரவி செய்த குற்றம் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி
சிதம்பரம் குறித்து ஒரு ட்வீட் போட்டது. சோனியா காந்தியின் மருமகனான ராபட்
வதேராவைவிட கார்த்தி சிதம்பரம் அதிகமாக சொத்து குவித்திருக்கிறார் என்பதுதான் அந்த
செய்தி. உடனடியாக ரவிமீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது. தகவல் தொழில்நுட்பச்
சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் குற்றம் அவர் இழைத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.
அதன்
பிறகு, பால் தாக்கரே மரணம் அடைந்தார். மும்பையே ஸ்தம்பித்தது. இதை விமர்சித்து, ''ஒருவரின் மரணம்குறித்து நமக்கு எழும்
மரியாதை இயல்பானதாக இருக்க வேண்டும். கட்டாயப்படுத்திப் பெறக் கூடாது'' என ஃபேஸ்புக்கில்
ஸ்டேட்டஸ் இட்டார்கள் இரு மாணவிகள். கடும் எதிர்ப்புகள் எழுந்ததும் இருவரும் கைது
செய்யப்பட்டனர். சம்பவம் நிகழ்ந்தது மும்பை என்பதால், இது தேசியச் செய்தியானது.
எக்கச் சக்கக் கண்டனங்கள் எழவே, கைது உத்தரவு பிறப்பித்த மாஜிஸ்திரேட் இடமாற்றம்
செய்யப்பட்டார். கைது செய்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். வழக்கை
விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாராஷ்டிர அரசைக் கடுமையாகக் கண்டித்ததோடு, இதுவரை
இணையதளக் கருத்துகளுக்காக நடவடிக்கை எடுத்திருக்கும் மேற்கு வங்காளம், புதுச்சேரி,
தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது..
No comments:
Post a Comment