பிரிவு 499:ஒருவருடைய நற்மதிப்பை கெடுக்க வேண்டும்
என்ற கருத்துடன் அல்லது அத்தகைய கேடு விளைவிக்கப்படும்
என்று தெரிந்திருந்தும் யாரேனும் அவரைப் பற்றிப் பிறர் அறியும் படி பேச்சால் எழுத்தால்
அறிகுறியால் அல்லது காட்சிப் பொருளால் வசை சாட்டுவதையும் வசை சாட்டி வெளியிடுவதையும்
அவதூறு செய்தல் என்கிறோம்.
விளக்கம்:
- ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவருடைய நற்மதிப்புக்கு கேடு உண்டாக்கக் கூடிய வசை சாட்டினை அவர் இறந்த பிறகு கூறுவதும் குற்றமாகும். அவரது குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் கருத்துடன் அத்தகைய வசைச்சாட்டு வருவதால் அது குற்றமாகிறது.
- ஒரு கூட்டு நிர்வாகத்திலுள்ள கம்பெனி அல்லது பலர் கூடிக் குழுவாக இயங்கும் ஒரு குழு அல்லது சங்கத்தைப் பற்றி வசை சாட்டுவதும் அவதூறாகும்.
- பிறரை கேலி செய்வதும் இரு பொருள் தக்கதாக வரும் சொற்களை உபயோகிப்படுத்துவதும் வசைச் சாட்டும் அவதூறாகிறது.
- பிறருடைய கணிப்பில் ஒருவருடைய ஒழுக்கம் அல்லது அறிவைப் பற்றிய தாழ்ந்த எண்னத்தை உண்டாக்கக் கூடிய அல்லது ஒருவருடைய ஜாதி அல்லது தொழிலை இழிவுபடுத்தக்கூடிய அல்லது ஒருவருடைய நாணயத்தை குறைக்கக்கூடிய அல்லது அவருடைய உடல் அருவருக்கத் தக்க நிலையில் உள்ளது என்ற எண்ணத்தை உண்டாக்கக் கூடிய அல்லது மிகவும் அவமானகரமான நிலையில் உள்ளது என்று குறிப்பிடக்கூடிய வசைச் சாட்டு அவருடைய நற்மதிப்புக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்று கொள்ளப்படும்.
விதிவிலக்கு
1.
பொது
மக்களின் நலன் கருதி ஒருவரைப் பற்றி உண்மையான வசைச் சாட்டினை வெளியிடுவது அவதூறாகாது.
2.
ஒரு
பொது ஊழியரைப்பற்றி அவர் கடமையாற்றும் முறையைப் பற்றி அல்லதுஅலுவல்களைக் கவனிக்கும்
அல்லது நடத்தும் வகையினைப் பற்றி நல்லெண்ணத்துடன் அபிப்பிராயமாகக் கூறப்படும் வசைச்
சாட்டை அவதூறு என்று கொள்ளக்கூடாது
3.
நீதி
மன்றத்தின் நடவடிக்கைகளைப் பற்றி அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பைப்பற்றி உள்ளதை உள்ளபடி
வெளியிடுவது அவதூறாகாது.
4.
நீதி
மன்றத்தில் முடிவு செய்யப்பட்ட வழக்கை பற்றி நல்ல எண்ணத்துடன் செய்யப்படும் விமரிசனம்
அவதூறாகாது.
5.
பொது
நிகழ்ச்சிகளைப் நாடகம், சினிமா, நடனம், பாடல் முதலியவை பற்றி நல்லெண்ணத்துடன் தெரிவிக்கப்படும்
அபிப்பிராயங்களை அவதூறாக கொள்ள முடியாது. நக்கீரன் கோபால்
தமிழக அரசு-பிரேம லதா
- பிரிவு 500: ஒருவர் மறொருவரை அவதூறு செய்தால் அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
- பிரிவு 501:ஒருவரை அவதூறு செய்யும் பொருள் :எழுத்து, பேச்சு அவதூறு என தெரிந்தும் அதை அச்சிடுவதும் உருவாக்குவதும் குற்றமாகும். இரண்டு ஆண்டுகள் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
- பிரிவு 502: அவதூறான பொருளை விற்பனை செய்வதும் விற்பனைக்குக் கொடுப்பதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
No comments:
Post a Comment