Posts

Showing posts from January, 2015

The Creation of Character (Tamil)

Image
 எப்படி இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்குவது? பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹென்றி ஜேம்ஸ் என்ற பிரபல நாவலாசிரியரைப் பற்றிய குறிப்புடன், இந்த அத்தியாயத்தை சிட் பீல்ட் துவக்குகிறார். இந்த ஹென்றி ஜேம்ஸ், கதை எழுதுவது எப்படி என்று பல ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். ஒரு கதை எப்படி உருவாகிறது என்ற இவரது கட்டுரைகள், மிகவும் பிரசித்தம். அப்படிப்பட்ட கட்டுரை ஒன்றில் (‘Art of Fiction’), ஹென்றி ஜேம்ஸ், கேரக்டர் – கதாபாத்திரம் – என்பதைப் பற்றி, கீழ்க்கண்டவாறு சொல்கிறார். What is character but the determination of incident? And what is incident but the illumination of character? ‘கதாபாத்திரம் என்பது, ஒரு சம்பவத்தின் விளைவல்லவா? அதேபோல், சம்பவம் என்பது, ஒரு கதாபாத்திரத்தைத் தெளிவாக விளக்குவதல்லவா?’ எந்தத் திரைக்கதையை எடுத்துக்கொண்டாலும், அவற்றில் ஒரே ஒரு விஷயம் பொதுவாக இருக்கும். அதாவது, அந்தக் கதையில் ஏதோ ஒரு சம்பவம் நடக்கும். இந்தச் சம்பவத்துக்குக் கதையின் பிரதான கதாபாத்திரம் எப்படி எதிர்வினை (ரியாக்ட்) செய்கிறது என்பதில் தான் அந்தப் படமே அடங்கியிருக்கும். எப்படிப்பட்ட கதையாக இருந்தால

What is a Screenplay-திரைக்கதை-Plot Points-The Subject

Image
Chapter 1 – What is a Screenplay? திரைக்கதைக்கு ஒரு வடிவம் உண்டு.       உண்மையில், கதை, வசனம், திரைக்கதை ஆகிய மூன்றும், ஒரே ட்ராக்கில் பயணிப்பவை. கதை இல்லாமல், திரைக்கதை எழுதவே முடியாது. போலவே, வசனம் என்பது, திரைக்கதையில் இல்லாத, தனிப்பட்ட விஷயம் இல்லவே இல்லை. திரைக்கதை என்பதில், வசனங்களும் அடக்கம். வசனம் இல்லாமல், திரைக்கதை எழுதுவது சாத்தியமே இல்லை (வசனங்கள் பக்கம் பக்கமாகப் பேசப்படும் திரைப்படங்களை மனதில் வைத்தே சொல்கிறேன். மற்றபடி, படத்தில் வசனம் இல்லை என்றால், திரைக்கதையிலும் வசனங்கள் தேவையில்லை). திரைக்கதை என்பது என்ன? திரைக்கதை என்பது, காட்சிகள், வசனங்கள் மற்றும் விவரிப்பின் மூலமாகச் சொல்லப்பட்டு, விறுவிறுப்பான ஒரு கட்டமைப்பினுள் வைக்கப்படும் ஒரு கதை. ஆகவே, எந்தக் கதையாக இருந்தாலும், அவற்றில் ஒரே போன்று இருப்பது என்ன? எந்தக் கதைக்கும் ஒரு ஆரம்பம், ஒரு நடுப்பகுதி மற்றும் ஒரு முடிவு ஆகியன இருந்தே தீரும் அல்லவா? (ஆனால், சில நான் லீனியர் படங்களில், இந்த வரிசை மாறக்கூடும் என்பதையும் நினைவு கொள்க).  ஆக, திரைப்படம் எடுப்பதன் மூல விதி என்னவெனில், திரைக்கதையின் ஒரு பக்கம், திரை