The basic features and elements of drama

Drama is a word that comes from Greek Drama, which means to do or perform. It literally means action. Drama has orms, one of which is theater. The act or process of performing a play in front of an audience is dramatization. 


Drama is a display of emotions, a representation of relationships and the portrayal of the different phases of human life. It sketches different personalities and represents a wide variety of emotions through the different characters it portrays.


Theme: 
The theme of a drama refers to the central idea of the play. It can either be clearly stated through dialogue or action or can be inferred after watching the entire performance.

Plot: 
The order of events occurring in a play is referred to as the plot of the drama. It is the basic storyline that is narrated through a play.  The logical connection between the events and the characters, which enact the story form an integral part of the plot of drama.

Characters:
 Each character in a play has a personality of its own and has a distinct set of principles and beliefs. Actors who play various roles in a drama have the very important responsibility of bringing the characters to life.

Dialogue: 
The story of any play is taken forward by means of the dialogue. The story is narrated to the audiences through the dialogue written by the playwright. The success of a drama depends hugely on the contents of the dialogue and the quality of dialogue delivery by the actors of the play.

Music:
 This element is important element of drama, it  comprises of the melody in the use of sounds and rhythm in dialogues as well as melodious compositions, which form a part of many plays. The background score, the songs and the sound effects that are used in a play make up the musical element of drama. music forms a very .

Visual Element: While the dialogue and music constitute the audible aspect of drama, the visual element deals with the scenes, costumes and special effects used in it. The visual element of drama, also known as the spectacle, renders a visual appeal to it. The costumes worn by the artists must suit the characters they are playing. Besides, it is important for the scenes to be dramatic enough to hold the audiences to their seats. The special effects used in a play add to the visual appeal. Thus, the spectacle forms an essential component of drama.

The structure of the story 

The structure of the story comprises of the way in which the story is put forth to the audience. The way in which the characters play their roles and the framework of the story constitute the drama structure. 

Direction

Direction is an essential constituent of a play. A well-directed story can help in fetching greater mass appeal. Stagecraft plays a vital role in increasing the visual appeal of a drama. The use and organization of different stage properties and the stage setup constitute the stagecraft, which is an essential component of a play.

The use of symbols 

The use of symbols implies the use of indirect suggestions in a drama. Logically used symbols help in making a scene more effective. The use of contrast is about using stillness followed by activity or silence followed by noise. It can also mean the use of contrasting colors to add to the visual appeal. It can mean the clever use of contrasting scenes following each other that enhance the dramatic element of a play.


நாடக இலக்கியத்திற்கும் கரு, பாத்திரம், கால அளவு, கட்டமைப்பு, காட்சி அமைப்பு, தொடக்கம், குறிப்பு, உரையாடல், முடிவு, தலைப்பு, உத்திகள் என்ற பல கூறுகள் இருக்கின்றன.
 
 நாடகக் கரு
 
 யாருக்காக எழுதுகிறோம் என்பதைப் பொறுத்தும் கருத்தேர்வு அமையும். பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, தொழிலாளர்களுக்கு, வேளாளர்களுக்கு,  மாணவர்களுக்கு என்று கரு வேறுபடும்.  பொதுவாக எல்லாருக்குமான பிரச்சினைகளான விலைவாசிப் பிரச்சினை, சாதிப் பிரச்சினை, தண்ணீர்ப் பிரச்சினை, வீட்டுவசதிப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை என எதுவும் கருவாகலாம். பழைய வரலாற்று நிகழ்வுகளின் மீது இக்காலப் பார்வையைச் செலுத்தும் கருவும் அமையலாம்.
 
 நாடகப் பாத்திரங்கள்
 
நாடக நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற பாத்திரங்கள் அமைய வேண்டும்.  நாடகத்தில் மிக அதிகமாகப் பாத்திரங்களைத் திணித்துவிடக் கூடாது.   பாத்திரங்கள் மூலமே கதை சொல்லப்பட வேண்டியிருப்பதால் பாத்திரப் படைப்பில் மிகுந்த கவனம் வேண்டும்.  மேடை நாடகத்தில் காட்ட முடியாத ஒன்றை நாடக இலக்கியத்தில் காட்ட முடியும். பாத்திரங்களின் மன உள்ளோட்டங்களைத் தனிமொழி வடிவில் காட்டலாம்.  நாடகத் தனிமொழி (Dramatic Monologue) ஷேக்ஸ்பியர் போன்ற பழைய நாடக ஆசிரியர்களால் வெற்றிகரமாகக் கையாளப்பட்ட உத்தி.

நாடகக் கதைப்பின்னல்
 
மற்ற படைப்புகளில் போல நாடகத்திலும் மோதல் அறிமுகம், மோதல் வளர்ச்சி, உச்சநிலை, முடிவு என்ற கட்டமைப்பு இருக்கவேண்டும்.  உச்சத்தை நோக்கி வளர்வதில்தான் நாடகத்தின் ஆற்றல் இருக்கிறது.    முடிவு பற்றிய குறிப்பை உணர்த்தும் வகையில் நாடகப்போக்கு ஒருமுகப்படுத்தப்படவேண்டும்.  அதே நேரத்தில் தீர்வை வெளிப்படையாகச் சொல்லாமல் மெல்ல மெல்ல அவிழ்க்க வேண்டும்.
 
நாடகக் கதையைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் காட்சிகளாக அமைப்பது இன்றியமையாதது. நாடகக்கதை நிகழக்கூடிய களங்களான இடங்களைத் தீர்மானிக்கவேண்டும்.  அதற்கேற்றவாறு காட்சிகளை அமைக்கவேண்டும்; நாடக நிகழ்ச்சிகளை அதற்கேற்பப் பிரிக்க வேண்டும். முதற்காட்சி கருவையும் பாத்திரங்களையும் அறிமுகப்படுத்துவதாக இருக்கும். அடுத்தடுத்த காட்சிகளில் மோதல் வளரும்.  வேறுவேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும் ஒரே நிகழ்வைத் துண்டுபோட்டுக் காட்சிகளை அமைக்கக் கூடாது. மகிழ்ச்சி, சோகம், அதிர்ச்சி, ஆறுதல், முயற்சி என்று மாறிமாறிக் காட்சிகள் அமையவேண்டும்.  தொடக்கக் காட்சியும் முடிவுக் காட்சியும் மிகவும் கவனமாக அமைக்கப்பட வேண்டும்.
 

நாடக முடிவு அழுத்தமாக அமையவேண்டும்.  நாடகத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுதர வேண்டும். முடிவுக் காட்சியில் மையப் பாத்திரங்கள் இடம்பெற வேண்டும்.
 
 உத்திகள்
 
ஆர்வத்தைத் தூண்டுதல், உச்சநிலை, எதிர்நிலை, குறிப்பு முரண் போன்ற உத்திகள் நாடகத்திற்குச் சிறப்பளிப்பவை.  முரண் (Dramatic Irony)  என்பது பாத்திரங்களுக்குள் ஒரு பாத்திரத்திற்குத் தெரிவது இன்னொரு பாத்திரத்திற்குத் தெரியாமல் இருப்பதால் கதையில் ஏற்படும் தனிச்சுவை.  கணவன் இறந்துவிட,  
உரையாடல் 
 
படிக்கும் நாடகத்தில் உணர்வுகளையெல்லாம் பேச்சில்தான் காட்டவேண்டியுள்ளது.தொழில்முறை நாடகங்களில் நீண்ட வசனங்கள், பயில்முறை நாடகங்களில் மிகை உணர்வு உரையாடல்கள், பரிசோதனை நாடகங்களில் சுருக்கமான செறிவான உரையாடல்கள் என்று அமைகின்றன.  வானொலி,    தொலைக்காட்சி நாடக உரையாடல்களும் வேறுபட்டவை. 
வரலாற்று நாடகங்கள்,  சமூக    நாடகங்கள்,    புராண நாடகங்கள் இவற்றின் உரையாடல் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.
 
 பெரும்பாலான இலக்கிய நாடகங்கள் நல்ல உயரிய நடையைப் பெற்றிருக்கின்றன. ஒளவையார், கவியின் கனவு முதலான நாடகங்களிலும் இராசராசசோழன், களம் கண்ட கவிஞன் முதலான நாடகங்களிலும் உயரிய நடை உள்ளது.  மேடைத் தமிழில் புரட்சி செய்தவர் அறிஞர் அண்ணா. அவரது ‘வேலைக்காரி’, ‘ஓரிரவு’ முதலானவற்றில் அழகிய நடை கையாளப்பட்டுள்ளது.
 
பொதுவாக உரையாடல் எதார்த்தத் தன்மையுடனும், சுருக்கமாகவும், குறிப்புணர்த்துவதாகவும் அமைவது சிறப்பு.  .
 
 நாடகத்தலைப்பு
 
நாடகத் தலைப்பும் இன்றியமையாதது.   பாத்திரப் பெயரால் இருக்கலாம்;   குறியீட்டுத் தலைப்பாகவோ, நகைச்சுவைத் தலைப்பாகவோ இருக்கலாம். தலைப்பு கவர்ச்சியாக அமைவது சிறப்பாகும்.
 
 அமைப்புக் குறிப்புகள்
 
காட்சி அமைப்புக் குறிப்புகள் நாடகத்தில் எழுதப்படவேண்டும். அக்குறிப்புகள் நிறையப் பொருள் தருகின்றன. இடம், காலம், நிகழ்ச்சி, அதன் சூழல் பற்றிய குறிப்பு ஒவ்வொரு காட்சிக்கும் தரப்படவேண்டும். மேடை நாடகங்களில் குறிப்புகள் விரிவாக இருக்கும். காட்சி அமைப்புக் குறிப்பு, ஒலிக்குறிப்பு, நடிப்புக் குறிப்பு, பாத்திரக் குறிப்பு இவையெல்லாம் தரப்படவேண்டும். பாத்திரங்களின் வருகை, செல்கை, பாத்திரத் தோற்றக் குறிப்பு, பாத்திரப் பேச்சின் தன்மை பற்றிய குறிப்பு போன்ற எல்லாம் தரப்படவேண்டும்.
 
மேற்கண்ட இத்தகைய கூறுகள் நாடக இலக்கியத்திற்கு இன்றியமையாதவை.  இவற்றைக் கொண்டுதான் ஒரு நாடகம் இலக்கியத்தன்மை பெறமுடியும். http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/html/mat01008tp4c.htm

Comments

Popular posts from this blog

தமிழக நாட்டுப்புற கலைகள்

FORMATS OF RADIO PROGRAMMES

ROLE OF ADVERTISING IN MARKETING MIX